அக்கம் பக்கத்துல கடனுக்கு வாங்கன பாத்திரம் உங்க கிட்ட இருக்கா ?? அப்ப கண்டிப்பா உங்களுக்கு பிரச்சனைதான் !!

முதலில் இரவல் பாத்திரம் என்றால் என்ன? மற்றவர்கள் வீட்டில் இருந்து உங்கள் வீட்டிற்கு ஏதோ காரணத்திற்காக வரும் பாத்திரம் இரவல் பாத்திரம். சிலர் பண்டிகை, விசேஷம் என்று ஏதாவது உணவு பிரசாதம் கொடுக்க வருவார்கள். சிலர் புதிதாக எதையாவது சமைத்து பார்த்திருப்பார்கள். அதை தெரிந்தவர்களிடம், நெருங்கி பழகுபவர்களிடம், அக்கம் பக்கத்தாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். இது போன்ற இரவலாக வரும் பாத்திரத்தை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் என்ன பிரச்சினை வரும் தெரியுமா? வாருங்கள் இப்பதிவில் அதற்கான விடை காணலாம். மற்றவர்களின் வீட்டு பாத்திரங்கள், நம் வீட்டில் இருப்பதும், நம் வீட்டு பாத்திரங்கள் அடுத்தவர்கள் வீட்டில் வைத்திருப்பதும் நமக்கு தரித்திரத்தை உண்டாகும்.

பாத்திரம் என்பது இரும்பினால் ஆன ஒரு உலோகம் தான். இரும்பு சனிபகவான் காரகத்துவம் பெற்ற ஒரு பொருளாகும். அதனால் தான் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வீட்டில் அதிகமாக சேர்த்து வைக்கக் கூடாது என்கிறார்கள். முடிந்தவரை இரும்பு பொருட்களை தவிர்ப்பதே நல்லது. அத்தியாவசிய பயன்பாட்டை தவிர எதற்காகவும் இரும்பை அனாவசியமாக சேர்த்து வைக்க வேண்டாம். இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தடுக்கப்படும்.ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு முடித்த பின் அதனை கழுவி, காய வைத்து உடனே அவர்களிடம் திருப்பி கொடுத்து விடுவது நல்லது. அதை விடுத்து மறந்து போய் நம்மிடமே வைத்துக் கொள்வது என்பது தரித்திரம் உண்டாக்கும். அதே போல நம் வீட்டு பாத்திரத்தில் ஏதேனும் உணவுப் பொருட்களை நாம் மற்றவர்கள் வீட்டில் கொண்டு போய் கொடுத்தாலும், அதனை கையோடு வாங்கி வருவது நல்லது.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டால், அவர்கள் மறந்து போய் விடுவார்கள், நீங்களும் மறந்து போய் விடுவீர்கள். பூஜை, புனஸ்காரங்கள் செய்த பின் படைக்கப்படும் பிரசாதமானது அக்கம் பக்கம் வீடுகளில் கொண்டு போய்க் கொடுக்கும் பொழுது, நம் முன்னோர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இந்த விஷயம் பல பேர் அறிந்து இருக்கலாம். சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். நம் முன்னோர்கள் அந்த பாத்திரங்களை கழுவக்கூடாது என்று கூறி வைத்துள்ளனர். பிரசாத பாத்திரத்தை கழுவி தரக்கூடாது என்பது தான் சாஸ்திர நியதி. எனவே பிரசாதம் வாங்கி தங்களுடைய வேறு பாத்திரத்திற்கு உடனே மாற்றி, இந்த பாத்திரத்தை உரியவர்களிடம் கொடுத்து விடுவார்கள். இதற்கு காரணமும் ஒருவகையில் மேற்கூறிய விஷயங்கள் தான்.

நாம் வேண்டும் என்றே ஒன்றும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. நம் அன்றாட பணிகளுக்கு இடையில், இது போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. மறந்து போய் விடுகிறோம். சிலர் கேட்பதற்கு சங்கோஜப்பட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள். ஒரு சிலர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து, அன்று உங்களிடம் ஒரு பாத்திரம் கொடுத்தேனே! எங்கே? என்று கேட்பார்கள். நாம் திருதிருவென்று முழித்துக் கொண்டிருப்போம். ஏனென்றால் நாம் அதை மறந்தே போயிருப்போம். அந்த சமயத்தில் சமையல் அறை சென்று தேடிக் கொண்டிருப்போம். இது இருவருக்கும் மன சங்கடத்தை உருவாக்கும். அதனால் இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அந்தந்த பொருட்களை அவர் அவர்களிடம் அப்போதே கொடுத்து விடுவது குடும்பத்திற்கு ஆரோக்கியமான விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.