அஜித்தின் அடுத்த பைக் ரைட் வீடியோ.. என்ன வேகம்.. ரசிகர்கள் ஆர்வம்!

இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் தற்போது தன்னுடைய ஏகே61 படத்தின் சூட்டிங்கில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதிக நாட்கள் நடைபெற்ற நிலையில், இடையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அஜித். பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்திலும் நடந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அஜித் பைக் ரைட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வீடியோவில் அஜித் தன்னுடைய ரைடில் அதிகமான வேகத்தை காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் தன்னுடைய சீனியர் ரைடர்ஸ் மற்றும் பயிற்சியாளர்களுடனும் அஜித் போஸ் கொடுத்துள்ளார். எவ்வளவுதான் சினிமாவில் பிசியான நடிகராக இருந்தாலும் பைக் ரைடில் தன்னுடைய விருப்பத்தை அஜித் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் உள்ளார். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்.

By admin