அஞ்சறைப்பெட்டியில் பணத்தை மட்டும் ஒளித்து வைத்தால் போதுமா ?? அஞ்சறைப்பெட்டியும் அதன் ரகசியமும் !!

காலம் காலமாக நமது பாட்டிமார்கள், தாய்மார்கள் பணத்தை சேர்த்து வைக்க ரகசிய இடமாக வைத்திருப்பது அவர்களின் அஞ்சறை பெட்டி தான். இது பல பேருக்கு தெரியாமல் இருந்து வந்தது. வங்கியில் இருக்கும் கஜானா பெட்டி கூட இவ்வளவு பாதுகாப்பாக இருக்குமா? என்று தெரியாது. ஆனால் இந்த அஞ்சறைப்பெட்டி மட்டும் மிகமிக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். அத்தகைய அஞ்சறைப்பெட்டியில் காசை மட்டும் சேர்த்து வைத்தால் போதாது. பணம் என்பது லக்ஷ்மி. லக்ஷ்மி இருக்கும் இடத்தில் இதையும் செய்து பாருங்கள். பணத்திற்கு பஞ்சமே இல்லாத நிலை உங்களுக்கு நிச்சயம் வரும். அதைப் பற்றிய தெளிவான தகவல்களை இப்பதிவில் காணலாம். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்றவுடன் பல குடும்பத்தில் இருந்து ரகசியமாக இருந்த அஞ்சறைப்பெட்டியில் உள்ள பணம் மொத்தமும் வெளியேறி குட்டு வெளிபட்டது அனைவரும் அறிந்ததே.

சமையலறையில் மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படும் பொருட்களில் ஒன்று கல் உப்பு வைக்கும் பீங்கான் ஜாடி. இரண்டாவது அரிசி பெட்டி, மூன்றாவது இந்த அஞ்சறைப்பெட்டி தான். இந்த மூன்று இடங்களையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் பலரும் அஞ்சறைப் பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்வது கிடையாது. இது மிகவும் தவறான ஒரு விஷயமாகும். யாருக்கும் தெரியாமல் பணத்தை ரகசியமாக சேர்த்து வைக்கும் இடம் அஞ்சறைப்பெட்டி. அப்படி இருக்கும் பொழுது அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டுமல்லவா? மாதம் ஒரு முறையாவது அஞ்சறைப் பெட்டியை சுத்தமாக கழுவி காய வைத்து மீண்டும் நிரப்பிக் கொள்ளுங்கள். அஞ்சறைப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம் இவற்றை போட்டு வைப்பார்கள். இதில் அடிக்கடி பயன்படுத்தாத மிளகிற்கு பதிலாக சோம்பு எனும் பெருஞ்சீரகத்தை போட்டு வைத்தால் பணம் ஈர்க்கும் வசிய சக்தி உண்டாகும். அது போல் அஞ்சறை பெட்டியில் பணம் வைக்கும் பொழுது அதனுடன் 11 ரூபாய் சேர்த்து வையுங்கள். 11 ரூபாய் என்பது தட்சணையாக பார்க்கப்படுவதால் தனம், தானியம் பெருகும் என்பது ஐதீகம்.

அதுபோல் பணத்தை ஈர்க்கும் சக்தி ஏலக்காய், பட்டை, கிராம்பு, பச்சை கற்பூரம் போன்ற பொருட்களுக்கு இருப்பதால் அவற்றில் சிறிதளவேனும் அஞ்சறைப்பெட்டியில் போட்டு வைப்பது பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டாக வழி வகுக்கும். மேலும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த பொருட்களாக இவை இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சறை பெட்டியில் பணம் மட்டும் ஒளித்து வைக்க வேண்டிய பொருள் அல்ல. அதனுடன் இன்னொரு பொருளும் ஒளித்து வைத்தால் இன்னும் இன்னும் பஞ்சமில்லாமல் பணம் பெருகும். அப்படி என்ன பொருள் அது? என்கிற கேள்வி எழும் அல்லவா? மகாலட்சுமி மஞ்சள் இருக்கும் இடங்களிலெல்லாம் நிச்சயம் இருப்பாள். மங்கலப் பொருளான மஞ்சள் வேறு, மகாலட்சுமி வேறு என்பது இல்லை என்றே கூறும் அளவிற்கு அதிக சக்தி வாய்ந்த பொருளாக மஞ்சள் இருக்கிறது. ஒரு சிலர் அஞ்சறைப் பெட்டியில் ஒரு பகுதி கிண்ணத்தில் மஞ்சள் போட்டு வைத்திருப்பார்கள். இது மிகச் சிறந்த விஷயம். ஒரு சிலர் மஞ்சள் போட்டு வைத்தால் வண்டுகள் வரும் என்பதாலோ அல்லது அதை கழுவுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலோ மஞ்சளை அதில் போட்டு வைக்க மாட்டார்கள். மஞ்சள் போட விருப்பமில்லாதவர்கள் ஒரு சிறிய மஞ்சள் டப்பாவை காசு ஒளித்து வைப்பது போல ஒளித்து வைத்துவிடுங்கள். இது மிகுந்த செல்வத்தை, பஞ்சமில்லாத பணவரவை உங்களுக்கு நிச்சயம் தரும்.