அடமானம் வைத்த நகை எத்தனை முறை மீட்டாலும் அந்த நகை திரும்ப திரும்ப அடமான கடைக்கு செல்கிறதா ?? இதை செய்யுங்கள் எளிதில் மீட்கலாம் !!

சில சமயங்களில் நாம் அடமானத்திற்க்காக வைத்த நகையை, கடைசிவரை மீட்க முடியாமலேயே போய்விடும். சில சமயங்களில் எப்பாடுபட்டாவது, பணத்தை சேர்த்து, அடமானம் வைத்த நகையை மீட்டு விடுவோம். ஆனால், அடமானத்தில் இருந்து மீட்டெடுத்த நகையானது, சீக்கிரமே திரும்பவும் நாம் அடமானம் வைத்த, அந்த கடைக்கே திரும்பிப் போய்விடும். இந்த அனுபவம் நம்மில் பல பேருக்கு உண்டு. இதற்கு என்ன காரணம் என்பது நமக்கு தெரியாது. ஆனால், மீட்டெடுத்த தங்க நகையை ஒருமுறைகூட அணிந்து அழகு பார்த்து இருக்க மாட்டோம். மீண்டும் அந்த நகையானது அடமானம் கடைக்கு போவதற்கு என்ன காரணம்? அப்படி மீண்டும் மீண்டும் அடமான கடைக்கு நம்முடைய நகை செல்லாமல், நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க என்ன பரிகாரம் செய்யலாம்?

இந்த இரண்டு கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தங்கத்தை அடமானம் வைக்கும் சில அடகு கடைகளாக இருந்தாலும், அல்லது ஏதாவது ஒரு தனி நபரிடம் அடமானம் வைத்தாலும், அல்லது சில நிறுவனங்களில் அடமானம் வைத்தாலும், அந்த நகையை, நகைக்கு சொந்தக்காரர், வட்டியும் முதலும் கட்டி மீட்டாலும், அந்த நகையானது மீண்டும் அடமானத்திற்கே சென்றுவிடும். இதற்கு காரணம், அந்த அடமான கடைகளில் எல்லாம், சில ஆகர்சன வித்தைகளை செய்து வைத்திருப்பார்கள். இப்படி செய்யும் பட்சத்தில் எத்தனை முறை நாம் அந்த நகையை மீட்டாலும், அந்த நகையில் இருக்கும் தோஷமானது விலகவே விலகாது.அந்த நகை கடைசிவரை உங்களுக்கு சொந்தமாகாமல், போய் விடும். இது சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும்.

சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மில் பல பேர் இதை அனுபவித்தும் இருக்கின்றோம். இதுதான் உண்மை. ஒட்டுமொத்தமாக எல்லா நகை கடன் தரும் நிறுவனங்களையும், வங்கிகளையும் குறை கூறவில்லை. ஆனால், சில இடங்களில் இப்படி நடப்பது உண்மை. எந்த இடங்களில் இப்படி நடக்கின்றது? எந்த இடங்களில் இப்படி நடக்கவில்லை! என்றெல்லாம் நம்மால் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது. உங்களது நகை அடமானம் கடைக்கு சென்று, கஷ்டப்பட்டு மீட்டு உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து விட்டீர்களா? உடனே இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். சிறிதளவு கல் உப்பை, தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு கொள்ளுங்கள். நீங்கள் வாங்கி வந்த நகையை ஒரு பத்து நிமிடங்கள் அந்த உப்புத் தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள்.அதன் பின்பு எடுத்து நல்ல தண்ணீரில் கழுவி, நன்றாக துணியில் துடைத்து விடுங்கள்.

உங்கள் தங்கநகைகள் எந்த சேதாரமும் ஏற்படாது. பயப்பட வேண்டாம். இப்படி முறையாக கழுவப்பட்ட அந்த தங்க நகையை, உங்கள் வீட்டில் மகாலட்சுமி படம் இருந்தால் அந்த படத்தின் காலடியில் ஒரு நாள் முழுவதும் வைத்து விடுங்கள். சிலையாக அம்மன் இருந்தால், அந்த சிலைக்கு அணிவித்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அந்த நிலையிலேயே தங்க நகை இருக்கட்டும். மறுநாள் அந்த நகையை எடுத்து எப்போதும் போல நீங்கள் நகை வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். அவ்வளவுதான். நீங்கள் அறிந்து கொள்வதாக இருந்தாலும் அந்த நகையை அணிந்து கொள்வதில் தவறில்லை. அந்த நகைக்கு எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும், இந்த பரிகாரம் செய்யும்போது அந்த தோஷம் எல்லாம் கட்டாயம் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு இந்த ஒரு முறையைப் பின்பற்றித்தான் பாருங்களேன்! நம் வீட்டு மகாலட்சுமி அடகு கடைக்கு போகாமல், நம் வீட்டிலேயே இருந்தால் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்பது அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்குத் தான் தெரியும். நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பலனடையலாம்.