அட கவினுக்கு இவரு ஜோடியா…! பிக்பாஸ் கவின் உடன் இணையும் குக் வித் கோமாளி நடிகை… அவரே வெளியிட்ட புகைப்படம்..

தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு புதிது புதிதாக பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது இப்படி ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தினால் நண்பர்கள் மூலமாக குறும்படம் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் தான் நடிகர் கவின் முறையாக கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றுக்கொண்ட இவர் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகர் ஆனார் கனா காணும் காலங்கள் சரவணன் மீனாட்சி தாயுமானவர் போன்ற தொடர்களில் நடித்தார்.

2013ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் ஆக நடித்ததன் மூலம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார் இதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வர 2019ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டார் கவின்.

அந்த சீசனில் மற்றொரு போட்டியாளரான லாஸ்லியா இடம் செய்த சேட்டைகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.அந்த சீசனில் 12 வாரங்களும் நாமினேஷன் லிஸ்டில் வந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றிக் கொண்டே வந்தனர் ஆனால் இறுதி கட்டத்தில் பிக்பாஸ் அளித்து 5 லட்சம் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறினார் கவின் இது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.ஆனாலும் அவரது ரசிகர்கள் அதை கொண்டாடினர்.

அவ்வப்போது கவின் லாஸ்லியா இடையேயான காதல் பற்றி கேள்வி எழுந்த வண்ணம் உள்ள நிலையில் லிப்ட் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து முடித்து விட்டார் கவின் இந்நிலையில் விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா கவின் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் இதனை கவினுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பவித்ரா இருக்கும் புகைப்படத்தை அவரே வெளியிட்டுள்ளார்.