அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய 2 முக்கிய பொருட்கள் உங்களிடம் இருக்கிறதா ?? இருந்தால் பணம் புகழ் சேர இது போல் செய்யுங்கள் !!

ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய இரண்டு பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் மிகவும் தெய்வாம்சம் பொருந்திய பொருட்கள். இந்த இரண்டு பொருட்களும் வீட்டில் இருந்தால் எந்த திருஷ்டி தோஷமும் உங்களை நெருங்காது. யாருடைய கண் திருஷ்டிகள், பொறாமை பார்வைகளும் உங்கள் மேல் விழாது பாதுகாத்து அரணாக நிற்கும். இது இந்த காலத்தில் மட்டும் இல்லங்க, காலங்காலமாக இதை வீட்டில் வைத்து பயன்படுத்திட்டு வராங்க. அப்படி அந்த 2 பொருள் என்ன பொருள்? அதை வைத்து செல்வம் பெருக நாம என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள். செல்வம் சேர்வதற்கும், வீட்டில் இருக்கும் நபர்கள் ஆரோக்கியமுடன் எப்போதும் இருக்கவும், பித்ரு தோஷம் நீங்கவும் வீட்டில் எப்போதும் இந்த பொருளை வைத்திருக்க வேண்டும். உங்களில் எத்தனை பேர் உங்களது முன்னோர்களை முறையாக வருஷா வருஷம் வணங்கி வருகின்றீர்கள்? சிலர் அதை செய்யாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள்.

இதனால் பித்ரு தோஷம் ஏற்பட்டு விடுகிறது. பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. சதா வீட்டில் சண்டை, சச்சரவுகள், வாக்குவாதம் என்று நிம்மதி இல்லாத வாழ்க்கை தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருள் உங்களுக்கு தினமும் பயனுள்ளதாக இருக்கும். அது போல் வீட்டில் வருமானம் பெருக, ஈட்டிய செல்வம் நிலையாக இருக்க, லக்ஷ்மி கடாட்சம் உண்டாக இன்னொரு பொருளும் குறைவில்லாமல் எப்பொழுதும் நிறைவாக உங்களிடம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த பொருள் உங்கள் வீட்டிலிருந்து குறைந்து கொண்டே வந்தால், உங்களுடைய வருமானமும், நிம்மதியும் குறையும். வீட்டில் இருக்கும் எந்த பொருள் குறைந்தாலும், இந்த பொருளை குறையாமல் பாதுகாத்து வரவேண்டும்.

வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓரையில் அடிக்கடி இந்த பொருளை வாங்கி வந்து அதற்குரிய இடத்தில் சேர்த்து விடவேண்டும். எப்பொழுதும் இந்த பொருள் நிரம்பியே இருந்தால், வீட்டில் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும், செல்வத்திற்கும் குறை இருக்காது என்பார்கள். இதை பலரும் தங்களது அனுபவத்தில் கண்ட உண்மை. ஒரு சிலர் இந்த பொருளை பயன்படுத்துவதே கிடையாது. முடிந்தவரை இந்த பொருளை உங்கள் வீட்டில் எப்பொழுதும் வாங்கி வைத்துப் பயன்படுத்துங்கள். சரி அப்படி என்ன பொருள் அது? அந்த இரண்டு பொருட்கள் என்னவாக இருக்கும்? என்கிற ஆர்வம் உண்டாகிறது அல்லவா? குறைவில்லாமல் நிறைவாக இருக்க வேண்டிய அந்த பொருள் கல் உப்பு தாங்க. வேறு ஒன்றும் இல்லை. கல் உப்பு லட்சுமியின் அம்சமாக இருப்பதால் இந்த பொருள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். அதுபோல் அந்த இரண்டாவது பொருள் பசுமாட்டு கோமியம் தாங்க.

பசுமாட்டு கோமியம் மிக முக்கியமாக நம்முடைய வீட்டில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். பசு மாட்டின் கோமியத்தில் திருஷ்டியை நீக்கும் ஆற்றல் உண்டு. தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிதளவு கல்லுப்பு, சிறிதளவு கோமியம் ஊற்றி, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து வீடு முழுவதும் தெளித்து வந்தால் எந்த ஒரு திருஷ்டியும், உங்களை ஒன்றும் செய்யாது. திருஷ்டி நீங்கும், பித்ரு தோஷம் நீங்கும், அதனால் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல்ல வருமானம், லாபம் பெருகும் படிப்படியாக பெருகும். மாலை நேரத்தில் ஐந்தரை மணி பொழுதில் இதை தெளித்துவிட்டு, வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் போதும். உன்னுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். பெரிதாக வேறு எந்த பரிகாரமும், பூஜைகளை நீங்கள் செய்ய தேவையில்லை. தினமும் இதை செய்தாலே நல்ல மாற்றங்கள் கட்டாயம் உருவாகும். நம்பிக்கையுடன் செய்து பயனடையுங்கள்.