அம்மன் கண்ணில் இருந்து வழிந்த ரத்தம் காரணம் தெரியாமல் குழம்பிய பக்தர்கள் !! என்ன காரணம் தெரியுமா !!

அறிவியலை கடந்த ஆன்மிகம் சார்ந்த பல நிகழ்வுகள் உலகின் பல்வேறு பகுதியில் இன்று வரை நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள ஒரு கோவிலில் திடீரென்று அம்மன் கண்களில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதை கண்டு அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.அது குறித்த விரிவான தகவல்களையும், அந்த வீடீயோவையும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

இலங்கையில் உள்ள வவுனியா நகரத்தில் அமைந்துள்ளது நாகபூசனி மற்றும் நாகதம்பிரான் கோயில். இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலையின் வலது கண்ணில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு சிவப்பு நிறமான திரவம் வழிந்துள்ளது. இந்த திரவமானது துடைக்க துடைக்க வழிந்துகொண்டே இருந்துள்ளது. இது குறித்து அந்த கோவிலை பராமரிக்கும் ஒருவர் கூறுகையில், கோவில் திருவிழா முடிந்து மூன்றாவது நாள் காலை 6 மணி அளவில் அம்மனுக்கு பூஜை செய்ய வந்தபோது, அம்மன் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதை கண்டேன்.ஒருவேளை குங்குமமாக இருக்கும் என்று எண்ணி இரண்டு மூன்று தடவை துடைத்தேன்.

ஆனால் துடைக்க துடைக்க நிற்காமல் மீண்டும் அந்த சிகப்பு நீர் வடிந்துகொண்டே இருந்தது. பிறகு ஆலயத்தில் பணிபுரியும் வேற சிலரை அழைத்து வந்து இந்த காட்சியை காண்பித்தேன். அவர்கள் பார்க்கும்போதும் ரத்தம் வழிந்த வண்ணம் தான் இருந்தது. இப்படி அம்மன் கண்களில் இருந்து ரத்தம் வழிய காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அம்மன் சக்தி வடிவாக இங்கு இருந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறாள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த நிகழ்வின் வீடியோ பதிவு இதோ.