அரசமரத்தடி பிள்ளையாரை எப்படி வணங்கி வந்தால் பணம் மறியாதையோடு வாழ முடியும் என்ற பரம ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் !!

பொதுவாகவே அரச மரத்திற்கும், அரசமரத்தடி பிள்ளையாருக்கும் அதிக சக்தி உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மைதான். அதிலும், அரசமரத்தடி பிள்ளையாரை இந்த முறைப்படி வணங்கினீர்கள் என்றால், உங்களுடைய உடலில் ஒரு விதமான சக்தி, அதாவது கண்ணுக்குத் தெரியாத நேர்மறை ஆற்றல் அதிகரித்து, அந்த சக்தியும், ஆரோக்கியமும் உங்களை வாழ்க்கையில் சுறுசுறுப்பாக செயல்பட வைத்து, விரைவான முன்னேற்றத்தை கொடுக்கும். அந்த சூட்சும ரகசியத்தை பற்றியும், அரச மரத்தை எந்த நேரத்தில் வழிபட வேண்டும். எந்த நேரத்தில் வழிபடக் கூடாது. அப்படி வழிப்பட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய உடம்பில் கோளாறு இருந்தாலும் சரி, மனதளவில் கோளாறு இருந்தாலும் சரி, தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் சரி, பல பிரச்சனைகள் இருந்தாலும், கடன் பிரச்சனைகள் இருந்தாலும், எல்லா விதமான குழப்பத்திற்கு தீர்வு தரும் பரிகாரம் தான் இது. அரச மரத்தடி பிள்ளையார் இருக்கும் இடத்திற்கு சென்று விடுங்கள். செல்லும் போதே ஒரு பித்தளை சொம்பில் நிரம்ப சுத்தமான தண்ணீரையும், கொஞ்சம் அளவு சுத்தமான அருகம்புல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் கோவிலுக்கு சென்ற பின்பு, உங்கள் கையில் இருக்கும் அந்த பித்தளை சொம்பில், தண்ணீரில் அருகம்புல்லை போட்டு வைத்து, விநாயகரது பாதங்களுக்கு அடியில் வைத்து விடுங்கள். கொஞ்சம் போல அருகம்புல்லை தனியாக எடுத்து விநாயகருக்கும் சாத்தி விட வேண்டும். அதன் பின்பு, அரச மரத்தை 9, 11, 27 உங்களால் இதில் எத்தனை முறை வலம் வர முடியுமோ அத்தனை முறை வலம் வரவேண்டும்.

அடுத்தபடியாக, பிள்ளையாரின் பாதத்திற்கு அடியில் வைத்த, அந்த தண்ணீரை எடுத்து குடித்து விட வேண்டும். இந்த வழிபாட்டை கட்டாயம் காலை 6 மணிக்கு செய்வது மிகவும் நல்லது. அருகம் புல்லை எடுத்து விட்டு, வெறும் தண்ணீரை மட்டும் பருகினால் போதும். உங்கள் உடம்பில் இருக்கும் தீராத நோய்களும் தீரும். தீராத நோய்களில் இருந்து விடுபட, மருந்து சாப்பிட்டு வந்தாலும், அதன் மூலம் சீக்கிரமாகவே உங்களால் குணமடைய முடியும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் தடைகள் தகர்க்கப்பட்டு, விரைவான முன்னேற்றம் ஏற்பட்டு, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி கிடைக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 27 நாட்களாவது செய்து பாருங்கள். படிப்படியான முன்னேற்றம் வருவதை உங்களாலேயே உணர முடியும். முன்னேற்றம் ஏற்பட தொடங்கியவுடன் பரிகாரத்தை அப்படியே விட்டுவிட வேண்டாம். வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருவது தவறு ஒன்றும் இல்லை.

உங்களால் வாழ்நாள் முழுவதும் இந்த பரிகாரத்தை செய்ய முடிந்தாலும் தாராளமாக செய்யலாம். சரி, அரசமரத்தை எப்போது வழிபடக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது? அதையும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும், குழந்தை பேறுக்காக, அரசமரத்தை வலம் வரும் பரிகாரத்தை செய்தாலும், செல்வச் செழிப்பாக வாழ வலம் வந்தாலும், நல்ல வேலை கிடைக்க, அரசாங்க வேலை கிடைக்க எந்த வேண்டுதலை வைத்துக்கொண்டு அரச மரத்தை சுற்ற வேண்டும் என்றாலும், கட்டாயம் மதியம் 12 மணிக்குள் அரச மரத்தை வழிபட வேண்டுமே தவிர, 12 மணிக்கு மேல் அரச மரத்தை சுற்றி வலம் வரக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 12 மணி என்பது, கூடுமானவரை 11 மணிக்குள்ளாகவே அரசமரத்தை சுற்றி முடித்து விடுங்கள். நன்றாக புரிந்துகொள்ளுங்கள், அரச மரத்துப் பிள்ளையாரை எப்போது வேண்டும் என்றாலும் வழிபாடு செய்யலாம். அதற்கு காலம் நேரம் கிடையாது. ஆனால் மதியம் 12 மணிக்கு மேல், அரச மரத்தை சுற்றி வலம் வந்து வழிபாடு செய்தால் எதிர்மறை ஆற்றல்கள் நமக்குள் அதிகமாகி தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.