அளவில்லாத பணத்தை பெற்றுத் தரக்கூடிய சக்தி இந்த ஒரு விநாயகருக்கு மட்டும் அதிகமாக உள்ளது !! அது எந்த விநாயகர் ?? நீங்க தெரிஞ்சுக்கணுமா !!

முழுமுதற் கடவுளான, விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு, வேண்டிய வரத்தை உடனே தரக்கூடிய சக்தி அதிகம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! அதிலும் குறிப்பாக இந்த விநாயகருக்கு சக்தி மிக மிக அதிகம். இந்த ஒரு பொருளில், விநாயகரை பிடித்து வைத்து, வழிபாடு செய்வதன் மூலம், நமக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கும், கூடிய விரைவில் தீர்வு கிடைத்துவிடும். விநாயகரைப் பிடித்து வைக்கப்போகும் அந்த ஒரு பொருள் என்ன? இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாட்டை, நம்முடைய வீட்டில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில், இந்தப் பூஜையை செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பசு சாணம், சிறிதளவு மஞ்சள்தூள், பச்சரிசி நெல், அரச இலை ஒன்று, பச்சரிசியில் தயார் செய்த அட்சதை, வாசனை மிகுந்த ஏதாவது ஒரு பூ. எச்சில் படாத ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் அதில் அரச இலையை வைத்து விடுங்கள். அதன் பின்பாக தயாராக வைத்திருக்கும் பசு சாணத்தில், சிறிதளவு பச்சரிசி நெல்லைப் போட்டு, பிசைந்து சாண பிள்ளையாரை பிடித்து, அரச இலையின் மேல் வைத்து விடுங்கள். (மஞ்சள் பிள்ளையாரை எப்படி பிடிப்போமோ அதேபோல் தான் சாணத்திலும் பிள்ளையாரை பிடிக்க வேண்டும்.) அந்தப் பிள்ளையாருக்கு ஒரு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு பூவையும் வைத்துவிட வேண்டும். கிடைத்தால் அருகம்புல் வைப்பது மேலும் சிறப்பை தேடித் தரும். பிள்ளையாருக்கு முன் பக்கத்தில் கொஞ்சமாக பச்சரிசி அட்சதையை தூவி விட்டு விடுங்கள். இப்படித் தயார் செய்த பிள்ளையாரை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, தினந்தோறும் பூஜை செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து எவரொருவர் 90 நாட்கள் செய்கிறார்களோ, அவர்களது வீட்டில், செல்வ வளம் கொழிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய வீட்டு பூஜை அறையில் வழக்கம்போல் தீபமேற்றி வைத்து, வெள்ளிக்கிழமை பூஜையை எப்படி செய்வோமோ, அதேபோல் தான் இந்த பிள்ளையாருக்கும், மிகவும் எளிமையான முறையில் தீப ஆராதனை காட்டி, தினம் தோறும் பூஜை செய்து வழிபட வேண்டும். எந்த ஒரு ஆடம்பர வழிபாடும் இதற்கு முக்கியம் இல்லை. மனதார விநாயகரையும், மகாலட்சுமியையும் நினைத்து வழிபட வேண்டியது மட்டும் தான் நம்முடைய வேலை. மகாலட்சுமி வாசம் செய்யும் பசு மாட்டு சாணத்தால், விநாயகரை பிடித்து வைத்து, முப்பத்துமுக்கோடி தேவர்கள் வசிக்கும் அரச மர இலையில் அந்த பிள்ளையாரை அமரவைத்து, வாசனை மிகுந்த மலர்களை சூட்டி, அட்சதை தூவி வழிபாடு செய்யும் பட்சத்தில், வீட்டில் இருக்கக்கூடிய பணப்பிரச்சனை, வாஸ்து பிரச்சனை, தீராமல் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை, இதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் என்றைக்குமே நிம்மதி நிறைந்த, நிறைவான சூழ்நிலை அமைய, இந்த வழிபாடு மிகவும் நல்லது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.