அழகான ஆண் குழந்தைக்கு தாயான பிக்பாஸ் அர்ச்சனாவின் தங்கை !! இவங்க யூடியுப் சேனல் ரொம்ப பேமஸ் ஆச்சே !!

விஜய் தொலைக்காட்சி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான் அப்படி ஒரு ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தது
அதன் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் அர்ச்சனா.

அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தமாக தொடர்ந்தவர் அதே சொல்லால் பலரால் காயப்படுத்த பட்டாலும் இன்றளவும் கம்பீரமாக தனது பதிவை பதிவிட்டு தான் வருகிறார் கடந்த சீசனில் ஆரி முதல் இடம் பிடித்து 50 லட்சம் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது இரண்டாமிடத்தில் பாலாஜி இருந்தார் அர்ச்சனா ஆரம்பகாலத்தில் தொகுப்பாளனியாக பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார் சன் தொலைக்காட்சியில் பெப்ஸி உமா அவருக்குப் பிறகு பிரபலமான பெண் தொகுப்பாளினி என்றால் அது அர்ச்சனா என்று சொல்லி ஆகவேண்டும்.

அவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சி 90’s கிட்ஸ்-ன் ஒரு ஃபேவரட் நிகழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும் அர்ச்சனாவுக்கு அனிதா என்ற சகோதரி ஒருவர் இருக்கிறார் இவர் சொந்தமாக வாவு லைஃப் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி இருக்கிறார் மேலும் சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது அதில் ஆரி உட்பட பல்வேறு பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அர்ச்சனா மகிழ்ச்சி அடைந்தார்.