அஷ்ட லட்சுமிகளும், உங்கள் வீட்டுக்குள் குடியேறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள் !! போதும் போதும் என்ற அளவிற்கு பொன் பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும் !! இந்த 1 முடிச்சு உங்கள் வீட்டில் இருந்தால் !!

வெறும் பணம் மட்டுமே கையில் இருந்தால் நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. பணம் காசு சேர்ந்த, நிம்மதியும் கட்டாயம் இருக்க வேண்டும். அதாவது அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!’ என்று ஆசிர்வாதம் செய்வார்கள். ஒருவருக்கு 16 வகையான செல்வங்களும் இருந்தால் மட்டுமே, அவர்களுடைய வாழ்க்கை நிறைவு பெறும். 16 வகையான செல்வங்களையும் பெற வேண்டும் என்றால், அதற்கு அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு நம்முடைய வீட்டில் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வாழ்க்கையானது சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நம்முடைய மன உறுதியும், நம் உடலை சுற்றி இருக்கும் ஆராவும் உறுதியாக இருக்க வேண்டும்.

நம்முடைய வீடு, நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக தான் இருக்கும். இருப்பினும் நாம் வெளியிடங்களுக்கு சென்று வரும்போது, அடுத்தவர்களின் பொறாமை, அடுத்தவர்களின் கண் திருஷ்டி, அடுத்தவர்களுடைய கெட்ட எண்ணம், இப்படி பல வகையான எதிர்மறை ஆற்றல்களை சந்திக்க நேரிடுகிறது. நம்மிடம் இருக்கும் கெட்ட ஆற்றல் நம் வீட்டிலும் வந்து குடியேறிவிடும். மன உறுதியோடும், மன தைரியத்தோடும் இருப்பவர்களிடத்தில், அவ்வளவு சுலபமாக எந்த ஒரு தீய சக்தியும் நெருங்கிவிட முடியாது. ரொம்பவும் பயந்த சுபாவமாக இருப்பவர்கள், திருஷ்டி சுத்தி போட்டதை தாண்டினால் கூட அவர்களுக்கு பிரச்சினை தொற்றிக் கொள்ளும். இப்படிப்பட்டவர்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய வீட்டையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தீர்வினை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அதாவது நெல்லிக்காய்க்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் சக்தி இயற்கையாகவே உள்ளது. ஆனால் நெல்லிக்காயை விட, நெல்லிக்காய் கொட்டைக்கு அதிக சக்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. நெல்லிக்காய் கொட்டை இருக்கும் இடத்தில், எதிர்மறை ஆற்றல் தாக்கவே தாக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நெல்லிக்காய் கொட்டைகள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது.

முடிந்தால் அதை வாங்கிக்கொள்ளலாம். முடியாதவர்கள் வீட்டில் நெல்லிக்காய்களை வாங்கி, சமைக்க, ஊறுகாய் போட பயன்படுத்தும் பட்சத்தில், அதில் உள்ள கொட்டைகளை மட்டும் தனியாக எடுத்து, வெயிலில் உலர வைத்து, நம்முடைய பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய பச்சை நெல்லிக்காய்களை வாங்கி, சமைக்க பயன்படுத்து வதற்கு முன்பாகவே கொட்டைகளை, எடுத்து விட வேண்டும். நெல்லிக்காய் கொட்டைகளில், ஒரு மூன்று கொட்டைகளை எடுத்து, சிறிய மஞ்சள் துணியில் கட்டி, நாம் வெளியில் செல்லும்போது, நம் பேக்கட்டிலோ அல்லது நம் பர்சிலோ வைத்துக் கொண்டால், நம்மை எதிர்மறை ஆற்றல் கட்டாயம் நெருங்கவே நெருங்காது என்பது உறுதி. இதோடு மட்டுமல்லாமல் இந்த நெல்லிக்காய் கொட்டைகளை ஒரு 50 கிராம் அளவு எடுத்து மஞ்சள் துணியில் கட்டியோ அல்லது அகலமான கிண்ணத்தில் போட்டு உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

ஏதாவது ஒரு இடம், யார் கண்ணுக்கும் தெரியாமல், அலமாரியின் மேல் பக்கத்திலோ, ஸ்லாபின் மேல் பக்கத்திலோ வைத்துக் கொள்ளலாம். கிண்ணத்தில் கொட்டி வைக்கும் பட்சத்தில் அதை மூடக்கூடாது. துணியில் கட்டி இருந்தால் அதனுடைய ஆற்றல் தானாக வெளிவரும். இந்த நெல்லி கொட்டைகளை வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பழைய கொட்டைகளை கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டு விடுங்கள். அது மீண்டும் மரமாக வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வீட்டிற்குள் வருபவர்களில் எதிர்மறை ஆற்றலும், உங்களது முன்னேற்றத்தை தடை படுத்தாது. நீங்கள் வெளியே சென்றால், உங்களை எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தாக்காது. வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறுவார்கள். இது போதுமே, நேர்மறை ஆற்றலோடு வாழ்பவர்களுக்கு, 16 செல்வங்களும் தானாக வந்து சேர்ந்துவிடும். வாழ்க்கையில் பிரச்சனைகள் குறையும். விரைவான முன்னேற்றத்தை அடையலாம். பணத்திற்கு பிரச்சனை இருக்காது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நெல்லி கொட்டைகளை வாங்கி பயன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.