ஆங்கில மருத்துவத்தால் கூட தீர்வு காண முடியாத உடல் உபாதைகளுக்கு தீர்வு கொடுக்கும் இந்த ஆச்சிரியமூட்டும் பரிகாரம்….

சில உடல் உபாதைகளுக்கு மருத்துவமனைக்கு சென்று கோடி கோடியாய் பணம் கொட்டிக் கொடுத்தாலும் அந்த பிரச்சனை நமக்கு தீராது. உடல் உபாதைகளுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று, பல வழிகளில், என்ன செய்வது என்று தெரியாமல் பணத்தை செலவழித்து கொண்டிருப்போம். கண்ணுக்கு தெரியாத எத்தனையோ எதிர்மறை ஆற்றலின் மூலம், எத்தனையோ பேர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அது புரிவதில்லை, தெரிவதும் இல்லை. மனிதனின் ஆரா வலிமையாக இருந்தால், எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் அவர்களை எளிமையாக, சுலபமாக தாக்கி விட முடியாது. ஒரு மனிதனுக்கு தன்னை சுற்றி இருக்கும் ஆரா வட்டம் மிகவும் பலவீனமாக இருந்தாலும், அந்த நபர் பயந்த சுபாவமாக இருந்தாலும், அவருக்கு எதிர்மறை ஆற்றலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.

12 மணி நேரத்தில், உச்சிப் பொழுதில் வெளியே சென்று வந்து விட்டால், உடனே காய்ச்சல் வந்துவிடும். முக்கூட்டு சந்து, நால்ரோடு போன்ற இடங்களில் திருஷ்டி கழித்து போட்டிருக்கும் பொருட்களை மிதித்து விட்டால் உடனே தலைசுற்றல், வந்துவிடும். தலைவலி வந்துவிடும். சாப்பாடு பிடிக்காது. சிலபேருக்கு சாப்பாடு ஜீரணமாகாமல் வாந்தி வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு உடல் சோர்வு காணப்படும். சில பேருக்கு தூக்கம் தூக்கமாக வரும். இதில் அனுபவ படாதவர்கள் இதை கட்டாயம் நம்ப மாட்டார்கள். சில பேருக்கு இதில் அனுபவம் இருக்கும். அவர்களுக்குத் தான் புரியும் இந்த பிரச்சனையில் உள்ள விபரீத விளைவுகள் என்னென்ன என்பது. சரி, இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்சனைகள் வரும்போதெல்லாம் மாந்திரீக தாந்திரீககளை மந்திரவாதிகளைத் தேடி செல்வது என்பது முடியாத ஒன்று. ஏதாவது பிரச்சனை வருவது போல் தெரிந்தால் நமக்கு நாமே என்ன பரிகாரம் செய்து கொள்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அம்மனை நினைத்து செய்யக்கூடிய பரிகாரம் தான் இது. இதற்கு தேவையான பொருட்கள் ஒரு மஞ்சள் துணி, ஒரு கொத்து வேப்ப இலை, 1 ரூபாய் நாணயம் போதும். வேப்பிலைகளை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து குல தெய்வத்தையும், அம்மனையும் மனதார வேண்டி பிரார்த்தனை செய்து ‘ஓம் சக்தி’ என்று 11 முறை உச்சரித்து, அந்த வேப்ப இலைகளை மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் வைத்து, அதை முடிச்சுப்போட்டு தலையணைக்கு அடியில் வைத்து படுத்து கொள்ளுங்கள். இரவு நேரங்களில், இந்த முடிச்சை மூன்று நாட்கள் உங்கள் தலையனை அடியிலேயே வைத்து படுத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நாள் இந்த முடிசினை அம்மன் கோவில்களுக்கு எடுத்துச்சென்று, அங்கு உள்ள மரத்தடியின் கீழ் வைத்துவிட வேண்டும்.

அதன் பின்பாக அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனை தரிசனம் செய்து செவ்வரளிப் பூக்களை வாங்கி கொடுத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான், இனி உங்களை பிடித்தது அனைத்தும் உங்கள் உடம்பை விட்டு நீங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக உடல் உபாதைகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்லக் கூடாது என்று சொல்லப்படவில்லை. மருத்துவரிடம் சென்று உடல் உபாதைகள் தீர வில்லை, கெட்ட ஆற்றலின் மூலம் பாதிப்பு இருப்பதாக தோன்றினால் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்து பார்க்கலாம். இதையும் தாண்டி உடல் கோளாறு பிரச்சனைகள் என்றால் அதற்கு தீர்வு தர மருத்துவரால் மட்டும்தான் முடியும். சில பேருக்கு எல்லாம் படுத்தால் கெட்ட கனவு வருவது போல் இருக்கும். தூக்கத்தில் யாரோ ஒருவர் வந்து நம் கழுத்தை நெறிப்பது போலிருக்கும். கை கால்களை அசைக்க முடியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருபவர்களும் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்து பயன் அடையலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.