ஆணோ பெண்ணோ இந்த ஒரு தீபத்தை 48 நாட்கள் வீட்டில் ஏற்றி வழிபட்டால் உங்கள் மனதிற்குப் பிடித்த வாழ்க்கை துணை கண்டிப்பாக அமையும் !!

எல்லோருக்குமே நினைத்தபடி நினைத்த வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. நாமொன்று நினைக்க அது ஒன்று நடக்கும் என்பது போல் தான் வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கேட்டால் கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை இருந்து விட்டால் நாம் யாரும் தெய்வத்தை நினைத்து பார்க்க மாட்டோமாம். அதனால் அடிக்கடி துன்பத்தைக் கொடுத்து நானும் உங்களுடன் இருக்கிறேன் என்பதை கடவுள் நமக்கு நினைவு படுத்துவாரம். வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனையை வேண்டுமானாலும் சந்தித்து விடலாம் ஆனால் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையவில்லை என்றால் அது மிகப்பெரிய சாபக்கேடாக நமக்கு முடிந்து விடும். அதனால் நாம் எதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும், நம்முடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சிலருக்கு திருமண தடை ஏற்பட்டு இருக்கலாம், சரியான வரன் அமையாமல் தடைபட்டுக் கொண்டே இருக்கலாம், அப்படியே அமைந்தாலும் ஏதோ காரணத்தினால் தட்டிச் செல்லலாம், இது போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் சிறந்த தீர்வாக இருக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் காணவிருக்கின்றோம். வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை ஆரம்பிக்கலாம் அல்லது பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கலாம். மாலை வேளையில் நல்ல நேரம் பார்த்து 48 நாட்கள் தொடர்ந்து இந்த விளக்கை பரிகார விளக்காக நீங்கள் போட்டு வர வேண்டும். பெண்கள் தான் இதை செய்ய வேண்டும். திருமண தடை ஆண்களுக்கு இருந்தால் என்ன செய்வது? என்று நீங்கள் கேட்கலாம். திருமணம் தடை இருக்கும் ஆண்களுக்கு பதிலாக அவர்களின் தாயார் அல்லது அவரை சார்ந்த பெண்கள் யாராக இருந்தாலும் தாராளமாக செய்யலாம்.

ஆனால் அந்த வீட்டிலிருக்கும் நபராக இருப்பது அவசியம். தீபத்தை குளிர வைக்கும் பொழுது குச்சியால் தள்ளி, வாயால் ஊதி கட்டாயம் குளிர வைக்கக் கூடாது. மலரை கொண்டு தான் குளிர வைக்க வேண்டும். இந்த விளக்கு ஏற்றுவதும் அதைக் குளிர வைப்பதும் பெண்கள் தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யக் கூடாது. ஒரு சிறிய தாம்பூல தட்டில் இரண்டு அகல் தீபங்களை புதியதாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மூன்று புறம் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். இந்த மூன்று பொட்டுக்களும் மூன்று தேவியர்களைக் குறிக்கும். இம்மூவரின் அருள் இருந்தால் தான் மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். இதில் ஒரு தேவியரின் அருள் கிடைக்காவிட்டாலும் குரு பார்வை நமக்கு கிடைக்காமல் செய்து விடுவார்கள். விளக்கை சுற்றி உதிரி பூக்கள் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை பொருட்கள் கிடைக்கும் கடைகளில் சிவப்பு நிற திரி கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.சிவப்பு நிறம் என்பது அம்பாளுக்கு மிகவும் பிடித்த நிறம். அதனால் சிவப்பு நிற திரியால் தீபமேற்றும் பொழுது வேண்டிய வரம் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த தீபத்தை கிழக்கு முகமாக எரிய விட வேண்டும். 48 நாட்கள் மாலை வேளையில் நல்ல நேரத்தில் அம்பாளை நினைத்து, இரண்டு சிவப்பு நிறத்தால் ஆன திரியால், மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து திருமணத்தடை நீங்கவும், மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையவும் மனதார வேண்டிக் கொண்டு கீழ்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம்: ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ! தீபம் தானாக அணையும் முன் குளிர வைத்து விடவேண்டும். மறுபடியும் அடுத்த அடுத்த நாட்களில் அதே தீபத்தில் திரியை மட்டும் புதிதாக மாற்றி விட்டு எண்ணெய் ஊற்றி தீபமேற்றி பூக்கள் வைத்து மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும். இடையில் மாதவிலக்கு ஏற்பட்டால் அந்த 3 நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதை விடுத்து அதன் பின் வரும் நாட்களை கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் எத்தகைய திருமண தடையும் நீங்கிவிடும். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ? அதே போல் உங்கள் மனதிற்கு ஏற்ப நல்ல வாழ்க்கை துணை நிச்சயம் அமையும்.