ஆண்டியையும் அரசனாக்கும் இந்த ஒரு விதையை மகாலட்சுமிக்கு இப்படி அர்ச்சனை செய்தால் போதும் வீட்டில் பணமழை பொழியும் !!

பணப்பிரச்சனை தீர எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் பணத் தேவைகள் இருக்கின்றன. சில விஷயங்கள் ஆன்மீகத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மகாலட்சுமிக்கு உகந்த சில பொருட்களை வீட்டில், பூஜை அறையில் வைப்பதால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அப்படி ஒரு பொருள் தான் இந்த விதை. நம் பணத்தேவையை பூர்த்தி செய்ய இந்த விதையை மகாலட்சுமிக்கு எப்படி அர்ச்சனை செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலருக்கு கடன் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கும். எவ்வளவு தான் போராடினாலும் கடன் பிரச்சினையை தீர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு சொந்த வீடு இல்லையே! என்ற ஏக்கம் இருக்கும்.

நமக்கு மட்டும் ஒரு சொந்த வீடு இருந்து விட்டால் போதுமே! வேறு எதுவுமே தேவை இல்லையே! என்கிற மனப்பான்மையில் இருப்பார்கள். சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்கு தேவையான பணத்தை ஈட்டக்கூடிய வருமானம் இருக்க வேண்டுமே? அது எல்லோருக்கும் இருந்து விடுவதில்லை. இப்படி முக்கிய தேவைகளுக்காக பணம் தேவைப்படுபவர்கள் இந்த சூட்சும பரிகாரத்தை செய்து பாருங்கள். கட்டாயம் நல்ல பலன் காணலாம். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை வைத்து லக்ஷ்மி மந்திரம் உச்சரித்து அர்ச்சனை செய்வதால் எதிர்பாராத பணவரவு ஏற்படும். இதனால் உங்களின் வேண்டுதல்கள், தேவைகள் நிச்சயமாக பலிக்கும் என்பது நம்பிக்கை. எல்லா நாட்டு மருந்து கடைகளில் தாமரை விதைகள் கிடைக்கப் பெறுகின்றன. தாமரையில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள் என்பது அனைவருக்கும் தெரியும்.

தாமரை விதையால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதால் வீட்டில் பணமழை பொழியும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. இந்த தாமரை விதைகள் மாலையாகவும் கிடைக்கப் பெறுகின்றன. தாமரைமணி மாலையை வைத்து ஜபம் செய்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும். நீங்கள் எந்த விதமான மன அழுத்தத்தில் இருந்தாலும் இதனை வைத்து ஜெபம் செய்வதன் மூலம் விரைவாக விடுபடலாம்.தாமரை விதைகளை 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது 108 தாமரை விதைகள் கோர்க்கப்பட்ட மணி மாலையாகவும் நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்த 108 தாமரை விதைகளை ஒரு தாம்பூலத் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி படத்தை பன்னீரால் துடைத்து சுத்தமான மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று இதை செய்ய வேண்டும். தாமரைமணி மாலையை நீங்கள் எப்போதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

மந்திரம் உச்சரிக்கும் பொழுது மட்டும் கழுத்தில் இருந்து எடுத்து உபயோகப்படுத்திக் கொண்டு மீண்டும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இரண்டு பக்கமும் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வையுங்கள். மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான மல்லிகை பூவை படத்திற்கு சாற்றுங்கள். பின்னர் தாம்பூலத்தில் இருக்கும் தாமரை விதைகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழ் வரும் மந்திரத்தை உச்சரித்து மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள். மந்திரம் ஓம் மகாலட்சுமியை நமஹ: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இது போல் செய்து வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களும், திருப்பங்களும் நிச்சயம் நிகழும். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த தாமரை விதையை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல காரியத்திற்காக வெளியில் செல்லும் பொழுது அந்த விதையிலிருந்து ஒரே ஒரு விதையை மட்டும் எடுத்துக் கொண்டு பையில் போட்டு செல்லுங்கள் ஜெயம் உண்டாகும்.