ஆபத்திலிருந்து காக்கும் ‘வராஹி அம்மன் வழிபாடு’ குறைவில்லாத பணம் கொடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் !!

வராகி அம்மன் பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். பூலோகத்தை காக்க அவதாரமெடுத்த வராக மூர்த்திக்கு வராகி அம்மன் உதவியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆபத்து வரும் இடத்திலெல்லாம் வராகி அம்மனை வழிபட்டால் நமக்கு உடனே வந்த ஆபத்து நீங்கி விடும் என்பது ஐதீகம். துன்பம் நேரும் போதெல்லாம் வராகி அம்மனை மனதார நினைத்து அழைத்துப் பாருங்கள். அவளுடைய மகிமையை நீங்களே உணர்வீர்கள். வராகி அம்மன் ஆபத்திலிருந்து காப்பாற்றுபவள் மட்டுமல்ல சகல செல்வங்களையும் மண்ணால் சம்பந்தப்பட்ட அத்தனை செல்வங்களையும் நமக்கு தரக்கூடிய சக்தி படைத்தவள் வராகி அம்மன். வராகி அம்மன் வழிபாட்டையும் அதனால் நமக்கு கிடைக்க போகும் பலன்களையும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வராகி அம்மன் பன்றி உருவத்தில் இருப்பதால் இவர் சாத்வீகமான அம்சம் உடையவரா? அல்லது உக்கிர தெய்வமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். வராகி அம்மன் வேண்டுபவர்களுக்கு மனமிரங்கி உடனே அருள் புரிபவர். இவர் ஏவல் செய்யும் சத்ருக்களை அழிக்க உருவானவள். தீயவர்களை அழிப்பதற்கும் இவளை நாம் வழிபட்டாலே போதும். நல்லவர்களுக்கு இவள் மிகவும் சாந்த ஸ்வரூபமானவள் என்பதால் தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம். நம் வீட்டில் வராகி அம்மன் படத்தை அல்லது திருவுருவத்தை தனியாக வைத்து விசேஷமாக வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கப் பெறும். இந்த மண்ணில் இருக்கும் அத்தனை சுக போகங்களையும் அனுபவிக்கும் வரத்தை நல்கும் தாயாக இருக்கின்றாள்.

வராகி அம்மனுக்கு மிகவும் பிடித்த மரவள்ளி கிழங்கு நிவேதனமாக படைக்கலாம். அதனுடன் வெண்பூசணி காயை வேக வைத்து மசித்து சாதத்துடன் கலந்து பிரசாதமாக வைக்கலாம். சுத்தமான தண்ணீரில் வெல்லம் கலந்து அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூளும், சிறிதளவு சுக்கு தூளும் கலந்து தீர்த்த பானகம் வைக்க வேண்டும். இதில் நிறைய சத்துக்களும், சக்திகளும் உண்டு. தினமும் வராகி அம்மனுக்கு குறிப்பிட்ட ஒரே நேரத்தில் இது போல் நைவேத்தியங்கள் வைத்து தூப, தீபம் காண்பித்து, கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதால் செல்வம் சேரும். உங்கள் வீட்டில் கஜானா பெட்டி நிரம்பும். தினமும் செய்ய முடியாதவர்கள் பஞ்சமி, அமாவாசை திதிகளில் மட்டுமாவது தொடர்ந்து இது போல் வீட்டில் வராஹி அம்மனை வழிபட்டு வந்தால் விரைவாகவே உங்களுடைய கஷ்ட நிலை மாறும்.

வருமானம் உயரும். செல்வம் பெருகும். உங்களுக்கு வர இருக்கும் அத்தனை ஆபத்துகளும் நீங்கும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. வராஹி அம்மனை தொடர்ந்து வழிபடுபவர்கள் அனுபவபூர்வமாக இதனை உணர்ந்திருப்பார்கள். வராகி அம்மன் மூல மந்திரம்: ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி! ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா!! பஞ்சமி திதிகளில் குறைந்தது ஐந்து பேருக்காவது அன்னதானம் செய்து வாருங்கள். உங்கள் கண்களில் படும் இயலாதவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். வீட்டில் வராகி அம்மன் படம் வைத்து நைவேத்தியங்கள் படைத்து, வீடு முழுவதும் குங்குலியம் மற்றும் வெண் கடுகு போட்டு தூபம் காண்பியுங்கள். இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, பொறாமை, துர்தேவதைகள், துஷ்ட சக்திகள் அனைத்தும் காணாமல் போய்விடும். மகாலட்சுமி மட்டுமே உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடியிருக்கும்படி வராகி அம்மன் செய்வாள் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.