ஆயுசுக்கும் மகாலட்சுமி உங்கள் வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டாங்க !! உங்கள் கைகளால் இந்த பணத்தை தானம் செய்து பாருங்கள் !!

நம்முடைய வீட்டில் பண கஷ்டம் வரக்கூடாது, கடன் சுமை இருக்கக்கூடாது, வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய ஆசையாகவும் இருக்கும். மகாலட்சுமியை நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைத்துக் கொள்ள, பெரிய பெரிய பூஜைகளை செய்வதை விட, இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை செய்து, அதன் பின்பு அதில் இருக்கும் பணத்திலிருந்து ஒரு பங்கை தானமாக கொடுத்து பாருங்கள்! உங்களது வருமானம் இரட்டிப்பாகும். கடன் சுமை உடனே குறையும். வாழ்நாள் முழுவதும் பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால், சுக்கிர ஓரையில் உப்பு வாங்குவது நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

வெள்ளிக்கிழமை அன்று புதியதாக வாங்கிய கல் உப்பை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முதலில் ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் காகிதத்தில் நான்கு பக்கத்திலும் மஞ்சள் கொஞ்சம் தடவிக் கொள்ளுங்கள். தயாராக இருக்கும் இந்த பேப்பரின் நடுவே உங்களால் எவ்வளவு ரூபாய் நோட்டு வைக்க முடியுமோ அதை வைத்துக் கொள்ளலாம். எந்த நோட்டாக இருந்தாலும், அதை 2 என்ற கணக்கில் வையுங்கள். அதாவது 500 ரூபாய் நோட்டாக இருந்தால் 2, 100 ரூபாய் நோட்டாக இருந்தாலும் 2, 200 ரூபாய் நோட்டாக இருந்தாலும் 2. அது உங்கள் சக்திக்கு தகுந்ததுதான். சக்தி உள்ளவர்கள் 2000 ரூபாய் நோட்டை கூட வைக்கலாம். இந்த நோட்டோடு 2 கிராம்பு, 2 துண்டு பட்டை, 2 ஏலக்காய், 1 வசம்பு எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து ஒரு பொட்டலம் போல மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று புதியதாக வாங்கிய உப்பை, சிறிதளவு எடுத்து ஒரு பீங்கான் கிண்ணத்தில் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் தயாராக இருக்கும் இந்த நோட்டு பொட்டலத்தை வைத்து விடுங்கள்.இந்த கிண்ணத்தை பூஜை அறையில் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று இதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இந்த கிண்ணத்தை வைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். சனிக்கிழமை காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, மகாலட்சுமிக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, மடித்து வைத்திருக்கும் பொட்டலத்திலிருந்து ஒரு நோட்டை மட்டும் எடுத்து உங்களது பீரோவில் வைத்து கொள்ள வேண்டும்.

மீதமிருக்கும் மற்றொரு நோட்டை, நீங்கள் தர்ம காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டும். அதாவது 100 ரூபாய் நோட்டை பரிகாரத்திற்கு பயன்படுத்தி இருந்தாலும், அந்த 100 ரூபாயை எடுத்து, இரண்டு ஏழைகளுக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுங்கள், அது போதும். வாரம் வாரம் வெள்ளிக்கிழமை உங்களால் இதை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, சம்பளம் வரும் அல்லவா? அதற்கு அடுத்து வரக்கூடிய ஒரு வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் எப்படி சரியானது என்றே தெரியாது. கட்டாயம் உங்கள் வம்சத்துக்கே நல்ல வழி கிடைக்கும். மகாலட்சுமி ஆயுசுக்கும் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே மாட்டாள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.