ஆரிக்கு கடைசி இடம்….? பிக்பாஸில் நடக்கும் சதி….

டிக்கெட்டு டு பினாலே டாஸ்க் தற்போது கொஞ்சம் மொக்கையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது ஏற்கனவே கொரானா ரொம்ப படுத்திட்டு இருக்கு நாமளும் ஏன் அதையே செய்யணும்னு பிக்பாஸ் கிரியேட்டிவிட்டி டீம் நினைத்து விட்டார்கள் போல பாட்டுப் போட்டி பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகளை ரூம் போட்டு யோசித்து போட்டியாளருக்கு அளித்து வருகின்றனர் அந்தவகையில் நேற்று குறைசொல்லும் டாஸ்க் நடைபெற்றது.இதில் போட்டியாளர்கள் மாறிமாறி சக போட்டியாளர்களின் குறைகளைச் சொல்லி தீர்த்தனர் முடிந்த பிறகு போட்டியாளர்கள் தங்களைத் தாங்களே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டுமென பிக்பாஸ் அறிவித்தார்.

இதில் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஹவுஸ் மேட்ஸ் எல்லாம் ஒரு குழுவா சேர்ந்து ஆரியையும் பாலாவையும் கார்ணர் செய்து ஆரிக்கு7 வது இடமும் பாலாவுக்கு 6வது இடமும் கொடுத்தாங்க.இந்த நிலை ரசிகர்கள் பிக்பாஸ்ஸை போட்டு ரகளை கிண்டலடித்து வருகின்றனர் அதாவது ஆரி எப்பயுமே குறை சொல்கிறார் என்று சொல்றீங்க ஆனால் தற்போது அனைவரும் குறை சொல்லும் டாஸ்க்ல ஆரிய தான் குறை சொல்றீங்க அதுவும் ஒரு குறை தானே என்பது போல ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.