ஆரியுடன் நான் இருக்கிறேன் ஒப்பனாக கூறிய பிக்பாஸ் நடிகையால் சர்ச்சை…..?

தமிழ் சினிமா உலகில் வெகு காலாமாக உழைத்து அனைவரும் அறியப்படும் நபராக மாறியவர் தான் நடிகர் ஆரி அவர் முதலில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட்டைசுழி படம்தான் என்பது குறிப்பிடதக்கது.

ஆரி சமிப காலமாக நடித்த மாலை பொழுதின் மயக்கத்திலே,உன்னோடு கா,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட சில கடங்கள் சரியாக அமையாததால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொன்டுள்ள ஆரி ஆரம்பம் முதலே அனைவருக்கும் அறிவுறை சொல்ல அதை சக போட்டியாளர்கள் விமர்சித்தது மட்டும் அல்லாமல் அனைவருக்கும் எதிரியாக மாறினார் ஆரி.என்னதான் அவர்கள் அப்படி செய்தாலும் நாளடைவில் ஆரிக்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அனைத்து வாரங்களும் மற்றவர்களால் நாமினேட் செய்யப்படும் ஆரி மக்களின் ஆதரவால் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில நாட்களாகவே ஆரிக்கும் பாலாக்கும் மோதலாகவே சென்று கொண்டு இருக்கிறது அதில் பாலா தனது கோவத்தை ஆக்ரஷோமாக வெளிப்படுத்தினாலும் ஆரி சற்று நிதானமாகவே இருக்கிறார்.

இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து பேசிய ரேஷ்மா ஆரியுடன் நான் இருக்கிறேன் அவர் தான் பிக்பாஸ் சீசன் நான்கின் டைட்டில் வின்னர் என கூறியுள்ளார். ரேஷ்மா பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரியை பற்றி மேலும் பல பிரபலங்கள் நல்ல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.