ஆரியை திட்டிய ரசிகருக்கு ரியோவின் மனைவி பதிலடி….

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது கடந்த வாரம் நடந்த Freeze டாஸ்க்கின் போது ரியோவின் மனைவி வந்தது குறிப்பிடத்தக்கது அது இருவருக்கும் உள்ள காதலின் வெளிப்பாடாக அமைந்தது. சமூக வலைதளங்களில் ரியோ ஒரு கோமாளி என சிலர் பதிவிட்டுள்ளனர் இந்நிலையில் ரியோவின் மனைவி தற்போது ஒரு பதிவிட்டுள்ளார் அதில் கூறும்போது ரியோ வை கோமாளி என திட்டும் அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக தன்னுடைய கவலைகளை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக போராடும் ஒருவரை நான் நேசிக்கிறேன்.

என்பதே எனக்கு பெருமை அளிக்கிறது நீ கோமாளியாகவே இரு மற்றவருக்கு ஒரு ஊன்றுகோலாக இரு ஒரு திரை கலைஞருக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பட்டம் கோமாளி என நான் கருதுகிறேன் ஒருவரை சிரிக்க வைப்பது அத்தனை சுலபமல்ல அவரை கோமாளி என்று அழைக்கும் அனைவரும் அவரது நகைச்சுவை உணர்வை தான் பாராட்டுகிறார்கள் என்று நான் நம்புகிறேன் அன்பை பகிருங்கள் இந்த எதிர்ப்பை எல்லாம் கடந்து வெற்றி பெறுவார் என நான் எதிர்பார்க்கிறேன் என்று பதிவு விட்டுள்ளார் ஸ்ருதி.

இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக ரசிகர் ஒருவர் ஆமாம் ரியோ சிறந்தவர் தான் அந்த பொய்யான ஆரிய விட எனக் கூறியிருந்தார் அதற்கு பதிலளித்துள்ள ஸ்ருதி ரியோவுக்கு ஆதரவு கொடுங்கள் ஆனால் மற்ற போட்டியாளர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் ஆரி அண்ணன் ஒரு சிறந்த மனிதர் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.