இணையத்தில் படு வைரலாகும் அஜித்தின் புதிய வீடியோ !! அந்த படத்தின் இன்ட்ரோ சீன் மாதிரியே இருக்கே !
இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வல்லமை என்று தலைப்பிடப்படும் ஏகே 61, இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர்களான போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகியோருடன் நடிகர் அஜித்தின் தொடர்ச்சியாக மூன்றாவது படமாகும். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 61/வல்லமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 2022 இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் கேள்விப்பட்டோம். AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது. முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார். இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த ஏகே61 படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணிபுரிகிறார்.AK61 படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

By admin