இது மட்டும் உங்கள் நெற்றியில் இருந்தால், நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான் !! மனதைரியம் அதிகரித்து, தோல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்காது !!

ஒரு மனிதனுக்கு வெற்றி என்பது எதில் கிடைக்கின்றது தெரியுமா? அடுத்தவர்களுடைய பாராட்டில் தான்! நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, அதாவது முதலாளியாக இருந்தாலும் சரி, சக ஊழியர்களுடன் வேலை செய்யும் தொழிலாலியாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை பாராட்டும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது, தவறு செய்தால் திட்டக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவர்கள் செய்யக்கூடிய நல்ல வேலைகளை, நல்ல வார்த்தைகளை சொல்லி, பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த பாராட்டு, ஒரு மனிதனை ஊக்குவிக்கும், அதேசமயம் முன்னேற்ற பாதையிலும் கொண்டு செல்லும், என்பதில் சந்தேகமே கிடையாது.

நிறைய பேருடைய முன்னேற்றத்திற்கு, உங்களுடைய பாராட்டு ஒரு ஊன்றுகோலாக அமையும். நீங்களும் எல்லோராலும் பாராட்டத்தக்க மனிதனாக மாற வேண்டுமா? எல்லோருக்கும் பிடித்தவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்யலாம்? ஏதாவது சூட்சம முறையை முறையை கையாளலாமா! என்று சிந்திப்பவர்களுக்கு இந்த பதிவு. நம்மை எல்லோருக்கும் பிடித்தவர்களாக மாற்றிக் கொள்ள ஒரு வழி இருக்கின்றது. இது ரொம்ப ரொம்ப சுலபமான முறை. முயற்சி செய்து பாருங்கள்.நாட்டு மருந்து கடைகளில் விற்கும் சிவப்பு சந்தனம், ஜவ்வாது, புனுகு, பன்னீர் இந்த நான்கு பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சிவப்பு சந்தனம் இரண்டு ஸ்பூன் அளவு, ஜவ்வாது ஒரு சிட்டிகை, புனுகு ஒரு சிட்டிகை, சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் விட்டு குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது ஈரப்பதத்தில் இருக்கும் அல்லவா.

இதை நெற்றியில் வைத்து விட்டு, அதன் மேல் பச்சை குங்குமத்தை வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். பொதுவாகவே வாசனை மிகுந்த பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தியும், அடுத்தவர்களை வசியப்படுத்தும் சக்தியும் இயற்கையாகவே உண்டு. இதை நெற்றியில் வைத்துக் கொண்டு, அதன் மேல் பச்சை குங்குமத்தை வைத்தால், அதற்கான பலன் இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சை குங்குமம் என்பது குபேரரின் குங்குமமாக சொல்லப்பட்டாலும், இந்த பச்சை நிற குங்குமத்திற்கும் பெருமாளுக்கும் கூட சம்பந்தம் இருக்கின்றது. பச்சை மரகதக்கல் அணியாமல் பெருமாளுக்கு அலங்காரம் என்பது நிறைவடையாது. நிறையப் பேருக்கு இது தெரிந்திருக்கும். அதுமட்டுமல்லாமல், மகாலட்சுமிக்கும் மிகவும் விருப்பமான பூ என்றால், அது தாமரை. அந்த தாமரைப் பூவின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுவது தான் இந்த பச்சை நிற குங்குமம். மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது தாமரை.

பெருமாளுடைய மனதில் குடி கொண்டிருப்பது மகாலட்சுமி. செல்வத்தின் அதிபதி குபேரன். ஆக மொத்தத்தில், குபேரனின் ஆசீர்வாதம், பெருமாளின் ஆசீர்வாதம், மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் ஒருசேர உங்களுக்கு கிடைத்து, இதுபோக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும், வாசனைப் பொருட்களும் சேரும் போது, நிச்சயம் நல்ல பலன் கிட்டும். நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையோடு குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, தினந்தோறும் நெற்றியில் இந்த திலகத்தை கொஞ்சமாக இட்டுக் கொண்டு வெளியில் செல்லுங்கள். இதற்கு முன்பு உங்களுக்கு கிடைத்த மரியாதைக்கும், உங்களுக்கு கிடைத்த பாராட்டிற்கும், இந்த திலகத்தை வைத்து கொண்டு சென்ற பின்பு, கிடைக்கக்கூடிய மரியாதைக்கும் நிறையவே வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இதை விட சுலபமான பரிகாரம் வேறு இருக்கிறதா என்ன? உங்களை அதிர்ஷ்டமானவர்களாக மாற்றிக்கொள்ள இது ஒரு தந்திரம் முறையும் கூட. நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.