தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்திருக்கிறார் . இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் அஜித் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டு நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெங்கல பதக்கத்தை வென்றார். இந்த சமயத்தில் நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல வார இதழுக்கு கொடுத்த பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்காமல் தனது உயிர் போகாது என்று கூறியுள்ளார் அஜித். அதேபோல் தற்போது சிறந்த படங்கள் மட்டுமின்றி துப்பாக்கி சூடு மூலமாகவும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இதை தற் போது ரசிகர் கள் கொண்டாடி வருகிறார்கள் .

இந்த துப்பாக்கி சூடு போட்டியின் அடுத்த கட்டமாக தமிழ் நாட்டு சார்பில் தென்னிந்திய அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் சினிமா துறையில் வெற்றி படங்களை கொடுப்பது மட்டுமல்லாமல் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். அது மட்டும் அல்லாமல் சிறிய விமானங்கள் தயாரிக்கிறார் மற்றும் துப்பாக்கி சூடு பைக் பயணம் என தனக்கு பிடித்ததை செய்து கொண்டு தனக்கென வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்காமல் விடமாட்டேன் என்று கூறியதற்கு இணங்க தற்போது அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் . இதனால் தான் அவர் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிட த்தக்கது .

By admin