இந்தியா – ஆஸ்திரேலியா: அஷ்வின் டெஸ்ட் வரலாற்றிலேயே இது தான் சிறந்த தொடர் என வி.வி.எஸ்.லஷ்மன் பாராட்டு.

இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் பந்து வீச்சை பார்த்து அசந்து பாராட்டிய லஷ்மன் கூறியதாவது வெளிநாட்டு மண்ணில் இவர் வெளிப்படுத்திய சிறந்த பந்து வீச்சு இது தான் என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

உலகின் மிக சிறந்த அணிகளாக கருதப்படும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்தீனார் தமிழகத்தை சோ்ந்த ரவிசந்திரன் அஷ்வின் இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டிவ் ஸ்மித் விக்கெட்டும் அடங்கும்.

நடைப்பெற்று முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் முதல்இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டிவ் ஸ்மித் விக்கெட்டை மிகவும் எளிமையாக வீழ்தீனார் என்பது குறிப்பிடதக்கது.அஷ்வினை போன்றே அறிமுக வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் சிறப்பாக விளையாடி உள்ளதாகவும் லஷ்மன் தெரிவித்துள்ளார். கோஹ்லி ஷமி இஷாந்த் போன்ற முன்னனி வீரர்கள் இல்லாத போதிலும் அணி வலுவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என்ற சம நிலையில் உள்ளதால் ஜனவரி 7ல் சிட்னியில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மீது மிகுந்த வரவேற்பு கூடியுள்ளதாகவும் அப்போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்பதும் குறிப்பிடதக்கது.