இந்தியா – ஆஸ்திரேலியா: 3வது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் வருகையால் பேட்டிங் வரிசையில் திடிர் குழப்பம்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டியில் விரைவில் வந்து இனைவார் என எதிர்பார்கப்படும் ரோஹித் சர்மா துவக்க வீரராக ஆடுவாரா அல்லது 5 வது இடத்தில் ஆடுவாரா என்று குழப்பம் நீடிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா இரண்டு வார கடுமையான கோரன்டீனிலிருந்து தற்போது அணியில் இணைந்துள்ளார் அது மட்டுமல்லாமல் மீதமுள்ள இரு போட்டிகளுக்கும் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் கடைசியாக தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஓப்பனாராக ஆடிய 3 டெஸ்ட் போட்டியில் 132.25 பேட்டிங் சராசரியுடன் 529 ரன்கள் குவித்ததுடன் மூன்று சதங்கள் விளாசீனார் அத்தொடரில் தனது அதிக பட்ச டெஸ்ட் ஸ்கோரான 212 ரன்களையும் பதிவு செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
ரோஹித் இந்தியாவிற்கு வெளியே ஆடிய போட்டிகளில் இதுவரை 18 போட்டிகளில் 26.32 பேட்டிங் சராசரியுடன் 816 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் இதில் இதுவரை சதம் அடிக்கவில்லை என்பதும் அவர் அடித்த 6 சதங்களும் இந்திய மண்ணில் மட்டுமே என்பதும் குறிப்பிடதக்கது.

இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் 5 டெஸ்ட் போட்டியில் 279 ரன்கள் குவித்துள்ளார் ஆனாலும் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டி புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவே பார்கப்படுகிறது முன்னதாக காயம் காரணமாக நியுசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை எனவே ரோஹித்திற்கு இது பொரிய சவாலாக அமையும்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய சுழற் பந்து வீச்சாளர் சரண்தீப் சிங் மாறுப்பட்ட அனைத்து விதமான போட்டிகளிலும் துவக்க வீரராக ஆடிவரும் ரோஹித் சர்மா 5வது வரிசையில் இறங்கினால் அது அவரது பேட்டிங்கை பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னால் இந்திய வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர் கோஹ்லி அணியில் இல்லாத காரணத்தினால் ரோஹித் மிடில் ஆர்டடரில் விளையாடுவதே சரியாக இருக்கும் என மாறுப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.