இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் நிச்சயம் உங்களுடைய வீட்டில் தெய்வம் வசிக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம் !!

ஒரு வீடு என்றால், அந்த வீட்டில் இறை அம்சம் நிறைந்து இருக்க வேண்டும். நம்முடைய குலதெய்வமும், இஷ்ட தேவதைகளும், அதிர்ஷ்டதேவதைகளும் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்தால் தான் நம்முடைய வீடு சுபிட்சம் பெறும். இப்படிப்பட்ட நல்ல சக்திகள் நம் வீட்டில் நிரந்தரமாக குடி கொண்டுள்ளது என்பதை உணர்த்தக் கூடிய அறிகுறிகள் என்ன? இந்த அறிகுறிகளை சில சமயங்களில் நம்மால் உணர முடியும். ஆனால் அந்த அறிகுறியானது நமக்கு நன்மையைத் தரக் கூடியதா, தீமை தரக்கூடியதா என்ற மனக் குழப்பம் சில சமயங்களில் வரும். இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு எதற்கு? அந்த தெய்வம் நம்முடன் இருக்கிறதா? இல்லையா? இப்படிப்பட்ட குழப்பங்கள் எதுவுமே இனி உங்களுக்கு வேண்டாம். பின் சொல்லப்படும் அறிகுறிகள் உங்களுடைய வீட்டில் இதற்கு முன்பாக நடந்து இருந்தாலும் சரி, அல்லது இனி நடந்தாலும் சரி, குலதெய்வத்தின் ஆசீர்வாதமும், அந்த அதிர்ஷ்ட தேவதைகளின் பரிபூரண ஆசிர்வாதம், உங்களுடைய வீட்டில் இருக்கின்றது என்பதை உணர்த்தக் கூடியவை தான். நம்முடைய வீட்டில் பூஜை செய்து முடித்த பின்பு, இறைவனிடம் வேண்டுதல் வைத்த பின்பு, நம்முடைய செவிகளுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நல்ல செய்திகள் வந்துசேரும்.

அந்த நல்ல செய்தியானது, நம் வீட்டில் இருப்பவர்களுக்கு நடக்க கூடியதாகவும் இருக்கலாம். அல்லது மற்றவர்களுக்கு நடக்கக் கூடிய நல்ல செய்தியாகவும் இருக்கலாம். இருப்பினும் நேர்மறையான செய்திகள் உங்களை சந்தோஷப் படுத்த கூடிய அளவுக்கு உங்களை பூரிப்படைய செய்யும் அளவிற்கு, உங்கள் செவிகளில் விழுந்து உங்களது மனம் திருப்தி அடையும். சில சமயங்களில் நம்முடைய வீட்டில் சுப செய்திகளை பேசும் போது, மங்களகரமான நறுமணம் வீச ஆரம்பிக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், நீங்கள் தொடங்கப் போகும் அந்த நல்ல காரியம் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய பேர், இந்த நறுமணத்தை உணர்ந்திருப்பீர்கள். வீட்டில் அந்த சமயத்தில் ஊதுவத்தி, சாம்பிராணி தூபம் கூட போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நல்ல, கோவிலில் இருந்து வரக்கூடிய வாசம் நம் வீட்டிற்குள் வரும். மனிதர்களுக்கு கஷ்டம் வராமல் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. கஷ்டமே இல்லாமல் யாராலும் வாழ்ந்து விடவும் முடியாது. அப்படிப்பட்ட கஷ்டம் கட்டாயம் நம்முடைய குடும்பத்திற்கும் வரும். அது பெரிய கஷ்டமாக, மிகப்பெரிய கஷ்டமாக கூட இருக்கலாம். அதன் மூலம் நீங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கலாம்.

பல வீண் விரயங்களையும் சந்தித்திருக்கலாம். இருப்பினும், அந்த பிரச்சனைக்கு, கடவுள் ரூபத்தில் யாராவது ஒருவர் வந்து உங்களுக்கு தீர்வை சொல்லி இருப்பார்கள். நீங்களும் அதை ஏற்று மனதார, பரிகாரத்தையும், வழிபாட்டு முறையையும் செய்து வருவீர்கள். அந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சனை சிலநாட்களிலேயே சுமூகமாக முடிந்து இருக்கும். அது பண பிரச்சினையாக இருந்திருக்கலாம், அல்லது உடல் நலக்கோளாறாக கூட இருந்திருக்கலாம். அதாவது மலை போல், வந்த கஷ்டம் கூட பனி போல விலகி இருக்கும். உங்களுடைய பிரச்சினைக்கு, உங்களுக்கு தீர்வை சொன்னது, கட்டாயம் அந்த தெய்வத்தின் ஸ்வரூபம் தான் என்பதில் சந்தேகமே இல்லை. மனித ரூபத்தில், கடவுள் தான் வந்து, உங்களுக்கு உதவி செய்துள்ளார் என்பதே இதற்கான அர்த்தம். இதேபோல் தான் நமக்கு ஏதேனும் பிரச்சனை வரப் போகின்றது என்பதை, முன்கூட்டியே நம்முடைய உள் உணர்வு சொல்ல ஆரம்பிக்கும். அப்படி இல்லையென்றால் யாராவது ஒருவர், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட, அந்த இடத்தில் வந்து நமக்கு உதவி செய்வார்கள். சிலதை எல்லாம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு இருந்தால் கூட, கடைசி சமயத்தில் நம்மால் அந்த ஒரு செயல்பாட்டை செய்ய முடியாமல் போய்விடும்.

இறைவன் அதை தடுத்து நிறுத்திவிடுவார். அதற்குப் பின்புதான் நாம் உணர்வோம்! ஓஹோ! ‘நல்ல வேலை, அந்த காரியத்தை நாம் செய்யவில்லை. செய்திருந்தால் நாம் பெரிய துன்பத்தில் சிக்கி இருப்போம் என்று!’ அந்த இடத்தில் உங்களை காப்பாற்றியது உங்களுடைய தெய்வம் தான். சில சமயங்களில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமலேயே தடைகள் வந்து கொண்டே இருக்கும். திடீரென்று நீங்களே எதிர்பாராமல், குலதெய்வ கோவிலுக்கு செல்லும் சந்தர்ப்பம் அமையும். அப்படி அந்த குல தெய்வத்தை தரிசனம் செய்து வந்த பின்பு, நாமே எதிர்பார்க்காத நல்லது ஒன்று நமக்கு நடக்கும். இப்படிப்பட்ட வியக்கத்தக்க சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், கட்டாயம் உங்களுக்கு தெய்வங்கள் துணை நிற்கின்றது என்பதில் சந்தேகமே இல்லை. இப்படியாக நீங்கள் கஷ்டப்படக் கூடிய தருணங்களில் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு விடிவு காலத்தை அந்த இறைவன் காட்டிக் கொண்டே இருந்தால், தொடர் கஷ்டங்களின் மூலம் உங்களை துயர படுத்தாமல், அந்த கஷ்டங்ளுக்கான தீர்வு உங்களுக்கு கிடைத்து, அந்த துயரத்திலிருந்து நீங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், இப்படிப்பட்ட சம்பவங்கள் உங்களுடைய வீட்டில் நடந்து இருந்தால், உங்களது குல தெய்வமும், இஷ்ட தெய்வத்தையும் இறைவழிபாட்டையும் என்றைக்கும் கைவிடாமல் நீங்கள் செய்து வாருங்கள். உங்களுக்கு அந்த இறைவனின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.