இந்த ஒரு கயிறை உங்கள் கையில் கட்டிக் கொண்டால், இத்தனை சக்தியும் உங்களுக்குள் வந்துவிடுமா ?? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே ??

‘மந்திரம் கால், மதி முக்கால்’ என்று சொல்லக்கூடிய பழமொழி நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நமக்கு என்னதான் திறமை இருந்தாலும், அந்த திறமையை ஜெயிப்பதற்கு ஒரு ஊன்றுகோல் வேண்டும். எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும், அந்த அறிவாற்றலை சரியான முறையில் பயன்படுத்தி, சரியான சமயத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு, சின்னதாக அதிர்ஷ்டம் என்று என்ற ஒன்று நமக்கு தேவைப்படுகிறது. இல்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது. ‘என்னோட அறிவு மட்டுமே போதும். அதிர்ஷ்டம் எல்லாம் எனக்கு தேவையே இல்லை. ‘ இப்படியும் சொல்லக்கூடாது. ‘எனக்கு முயற்சியே பண்ண வேணாம். ஜாதகத்துல அதிர்ஷ்டம் சொல்லிட்டாங்க! நான் உழைக்கவே மாட்டேன். கம்முனு உட்கார்ந்து இருப்பேன். ஆனால் நான் சீக்கிரமாகவே பணக்காரராக ஆகிவிடுவேன்’. அப்படின்னு நம்பக் கூடாது. நம்முடைய முயற்சிக்கு, அதிர்ஷ்டம் ஒரு கை கொடுக்கிறது என்றால், நம்முடைய முயற்சி என்பது அதைவிட பல மடங்காக இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

அந்த வரிசையில் ஒரு மஞ்சள் கயிரில் அடங்கியிருக்கும் இரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.வாழ்க்கையில ஒரு சான்ஸ் கிடைச்சா போது சார்! அதை நான் சரியா யூஸ் பண்ணிப்பேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? நீங்க இத செஞ்சு பாருங்க. ஏதாவது ஒரு நூல் கிடைத்தால் கூட அதைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்து விடுவேன் என்ற நம்பிக்கை உங்கள் மனதில் இருக்கின்றதா? நிஜமாவே ஒரு நூலை உங்க வீட்டில எடுத்துக்கோங்க. பூ கட்டும் நூல் இருந்தால் கூட போதும். அந்த நூல் ஒற்றை இழையாக இருக்கக் கூடாது என்பதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். ஒற்றை இழையாகா இருந்தால், இரண்டாக திரித்துக் கொள்ளுங்கள். அந்த நூலில், கொஞ்சும் மஞ்சள் தடவி, உலர வைத்து விடுங்கள். எப்படியாவது முயற்சி செய்து ஒரு நாளைக்காவது காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையை அலங்காரம் செய்துவிட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு புத்துணர்ச்சியோடு, இந்த மஞ்சள் கயிறை எடுத்து சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து, மனதார வேண்டிக் கொண்டு உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்து, அந்த கயிறு உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கையில் கயிறை வைத்துக்கொண்டு, குலதெய்வத்தை வேண்டுங்கள். பஞ்சபூதங்களாளும் உங்களுக்கு எந்த தடங்களும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்தபடியாக நவகிரகங்களை நினைத்துக்கொண்டு அந்த நீளமான மஞ்சள் கயிறில் ஒன்பது முடிச்சுகளை போட வேண்டும். ஒரு முடிச்சுக்கு 2 இஞ்ச் கேப் விட்டு இன்னொரு முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். தாயத்துக் கட்ட கையிறில் முடிச்சு போட்டு வைத்திருப்பார்கள் அல்லவா? அது மாதிரி.

நவக்கிரகங்களின் பெயர்கள் தெரிந்தால், வரிசையாக ஒவ்வொரு கிரகத்தின் பெயரை சொல்லி அந்த கையிறில் முடிச்சு போட்டுக் கொள்ளலாம். நவகிரகங்களின் பெயரை உங்களுக்கு உச்சரிக்கத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. நவகிரகங்கள் என்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. ஜாதக கட்டத்தில் பிரச்சனை இருந்தாலும், அந்த தடை நீங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை, மனதார வைத்து வரிசையாக 9 முடிச்சுகளைப் போட்டு, அந்த கயிறை உங்கள் கையில் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். இதில் எந்த மாய மந்திர வித்தைகள் கிடையாது. நம்பிக்கையோடு நீங்கள் போடப்படும் ஒவ்வொரு முடிச்சும் உங்களுடைய வாழ்க்கையை கட்டாயம் படிக்கற்களாக மாற்றும் என்பதில் சந்தேகமே கிடையாது. வெறும் மஞ்சள் கயிறு தானே என்று கையில் கட்டிக் கொள்ளாமல், உங்கள் வாழ்க்கையை முன்னேற்றக் கூடிய அஸ்திரமாக நினைத்து உங்கள் கையில் இதை கட்டிக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிசயத்தை நீங்களே தெரிந்து கொள்ளலாம். கயிறை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் உங்கள் கணவர், உங்கள்மனைவி யாரிடத்தில் கொடுக்தும், உங்கள் கையில் கட்டி விட சொல்லலாம். தவறொன்றும் கிடையாது.