இந்த ஒரு காசு உங்க பாக்கெட்ல இருந்தா போதும் பாக்கெட்ல இருக்க பணம் அனாவசியமா செலவு ஆகவே ஆகாது !! மாதக் கடைசியிலும் பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு இடமே கிடையாது !!

மாதம் முழுவதும் உழைப்போம், அதற்கான ஊதியமும் கிடைக்கும். ஆனால், மாதத்தின் இறுதி நாட்களில் பற்றாக்குறை பட்ஜெட் தான். எல்லோருடைய நிலைமையும் இதுதான். கையில் வருமானம் இருந்து கொண்டே இருந்தாலும், அனாவசிய செலவு, வீண் விரயச் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். நம்மில் நிறைய பேர் செலவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இதற்கு ஆன்மீக ரீதியாக ஏதாவது தீர்வு உள்ளதா என்று தேடிபவர்களுக்கான பதிவு தான் இது. மிகவும் சுலபமான ஒரு முத்திரையை வைத்து, நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை பாதுகாத்துக் கொள்ளப் போகின்றோம். அது என்ன முத்திரை, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காலையில் எழுந்ததும் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இப்படி செய்ய வேண்டும். உங்களது வலது கையில் சின் முத்திரையை வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் நாணயமாக இருந்தாலும் சரி, ஐந்து ரூபாய் நாணயமாக இருந்தாலும் சரி அந்த நாணயத்தை சின்முத்திரை வைத்திருக்கும் உங்கள் உள்ளம் கைகளில், வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயம் கீழே விழக்கூடாது.உங்கள் உள்ளங்கைகளில், சின் முத்திரையை வைத்தபடி, உள்ளங்கைகளில் இருக்கும் நாணயத்தை பார்த்து, ‘இன்றைய தினம் எனக்கு எல்லாம் லாபகரமாக அமைய வேண்டும். என் கையிலிருந்து செலவாகக் கூடிய தொகை, இரண்டு மடங்காக லாபமாக திருப்பி என்னிடமே வரவேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும். கைநிறைய இலாபத்தைப் பெற வேண்டும்.’ என்று மனதார சொல்லியபடி, லட்சுமி குபேரரை நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வேண்டுதலை வைத்த பின்பு, உங்கள் கையில் இருக்கும் நாணயத்தை அன்றைய தினம் செலவு செய்யும் பணத்தோடு சேர்த்து செலவு செய்ய வேண்டும். இப்படி செலவை தொடங்கும் பட்சத்தில் நீங்கள் செய்யும் செலவு, அடுத்த சில நாட்களில் உங்களுக்கான இரட்டிப்பு வருமானத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதக் கடைசியிலும் கூட நம் கையில் பணம் இருப்பு இருக்கும். பற்றாக்குறை பட்ஜெட்க்கு இடமிருக்காது. ஒரு 11 நாட்கள் தொடர்ந்து இந்த முத்திரையை வைத்து, இந்த வழிபாட்டை செய்து வாருங்கள். நிச்சயம் உங்களது விரயங்கள் குறைக்கப்பட்டு, செலவுகள் குறைக்கப்பட்டு, வருமானம் இரட்டிப்பாவதை உங்களாலேயே உணர முடியும். நம்முடைய உள்ளங்கைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கிறது அல்லவா. நீங்கள் ஆண்களாக இருந்தால், காலையில் எழுந்ததும் கொஞ்சம் சந்தனத்தில் பன்னீர் ஊற்றி குழைத்து, அதை உங்கள் இரு உள்ளங்கைகளிலும் தடவி கொண்டு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். ஒரு சொட்டு சந்தனம் போதும். நீங்கள் பெண்களாக இருந்தால், சிறிதளவு மஞ்சளை பன்னீர் ஊற்றி குழைத்து ஒரு சொட்டு, உங்கள் உள்ளங்கைகளை வைத்து தடவிக்கொண்டு அதன் பின்பாக கிளம்பி பாருங்கள். இப்படியாக வாசனைப் பொருட்கள் உங்களது உள்ளங்கைகளில் சேரும் போது, இதன் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டம் வருவதற்குக் கூட நிறைய வாய்ப்பு உள்ளது. இது ஒரு சுலபமான முறை தானே, வருமானத்திற்காக, வீண் விரயங்களை குறைப்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றித் தான் பார்ப்போமே! நம்பிக்கையோடு செய்தால் விரைவில் பலன் அடைய முடியும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.