இந்த ஒரு தெய்வத்தின் படத்தை உங்கள் வீட்டு வாசலில் மாட்டி வைத்தால் போதும் !! நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான் !! எதிரி தொல்லை, கண்திருஷ்டி தொல்லை, எந்த பிரச்சனையும் இல்லை !!

பிரச்சனை இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் கூட, பிரச்சனையை உண்டு பண்ணுவது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும் பொறாமை குணமும் தான். நமக்குக் கிடைக்காதது, இவர்களுக்கு கிடைத்து விட்டதே என்ற அந்த எண்ணம்தான் படிப்படியாக கண்திருஷ்டியாகவும் கோபமாகவும் மாறி நம்மை தாக்குகிறது. இதிலிருந்து நம் வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ள நம்முடைய வீட்டில் நிலவாசலுக்கு, வெளியில் எந்த தெய்வத்தின் திரு உருவத்தை வைப்பது நன்மை தரும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே நம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு, நாம் அழகாக புடவை உடுத்தி நாள் கூட அது பொறுக்காது.

இத்தனைக்கும் அவர்களிடம் எக்கச்சக்கமாக புடவை இருக்கும். இருப்பினும் அடுத்தவர்களிடம் இருக்கும் சாதாரண நூல் புடவையைப் பார்த்து, சிலருக்கு கண் வைப்பது தான் வேலை. எல்லோரையும் ஒட்டுமொத்தமாக குறையும் கூறி விட முடியாது. சிலபேரது குணம் இப்படிப்பட்ட பொறாமை கொண்ட குணமாக இருக்கும். இதற்காக மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அடுத்தவர்களுக்கு பயந்து நம்முடைய வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்கவும் முடியாது. ஆனால், நம்முடைய வளர்ச்சியை கண்டு எங்கே அடுத்தவர்கள் கண் வைத்து விடுவார்களோ என்று, நமக்கு கஷ்டம் இருப்பது போல நடிப்பதும் மிகவும் தவறு.

உங்களுடைய முன்னேற்றத்தை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றால், அதைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அதைவிட்டுவிட்டு, ‘வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பவர்கள் கூட, எனக்கும் கஷ்டம் உள்ளது என்று சும்மா நடித்தால் கூட’ அது உண்மையாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள். சரி, இப்போது நம்முடைய நில வாசப்படியில் வைக்க வேண்டிய அந்தப் படம் எந்த படம்? தடைகளை தகர்த்தெறிய கூடிய விநாயகரின் படம்தான் அது. அந்த விநாயகர் படத்திலும், குறிப்பிட்டு சொல்லும் ‘கற்பக விநாயகரின்’ திருவுருவப்படத்தை உங்கள் வீட்டு நிலை வாசற் படிக்கு வெளியில் எல்லோர் கண்ணுக்கும் படும்படி வையுங்கள். நீங்கள் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, செல்லக்கூடிய காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று கற்பகவிநாயகரிடம் வேண்டிக் கொண்டு சென்றால் கட்டாயம் உங்களுடைய காரியம் வெற்றி தான்.

அக்கம்பக்கத்தினர் உங்களுடைய வீட்டை பார்த்து, உங்கள் வீட்டில் இருக்கும் சந்தோஷத்தைப் பார்த்து, பெருமூச்சு விட்டாலும் அது உங்களை வந்து தாக்காது. உங்களுடைய எதிரிகளின் கெட்ட செயல்பாடுகளாலும், எந்த ஒரு விளைவுகளும், உங்களை வந்து அடையாமல் இருக்கும். ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் கூட இந்த கற்பக விநாயகரை வைத்து வழிபடுவது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நிலை வாசலில், ஒரு கற்பகவிநாயகர். வீட்டின் பூஜை அறையில் ஒரு கற்பக விநாயகர் கட்டாயம் இருந்தால் அந்த வீடு சுபிட்சம் அடையும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.