இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் கையில் வைத்துக் கொண்டாலே போதும் .,. அந்த ஆஞ்சநேயரே உங்களுடன் இருப்பதாக உணர்வீர்கள்,, தோல்வி உங்கள் பக்கத்தில் வரவே பயப்படும் !!

துணிச்சலோடு செயல்படுபவர்கள், தங்களுடைய முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தாலும், பலமுறை வெற்றி வாகை சூடி விடுவார்கள். ஆனால் தேவையற்ற மன பயம் கொண்டவர்கள், துணிவோடு செயல்படாமல், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பைக் கூட நழுவ விட்டுவிட்டு, எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் பயந்துகொண்டே தங்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடுவார்கள். ஆக, ஒருவருக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், துணிச்சலும், உறுதியும், மன தைரியமும், அவசியம் தேவை அல்லவா. ஒருவர் தொடர்ந்து வாழ்க்கையில் தோல்வி அடைவதற்கு அவருடைய பயம் கூட காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு மனதைரியம் வர வேண்டுமென்றால், துணிச்சல் வர வேண்டும் என்றால், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

துணிச்சல், வெற்றி, தைரியம், உறுதி, விடாமுயற்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த ஆஞ்சநேயர் தான். ஒருவரின் மன பயம் போக வேண்டுமென்றால், தினம்தோறும் ஆஞ்சநேயரை நினைத்து வழிபட வேண்டியது அவசியம். ஆஞ்சநேயரை வழிபட்டால், சன்னியாசம் சென்று விடுவார்கள் என்று சொல்லுவதெல்லாம் தவறான கருத்து. ஆஞ்சநேயரை வழிபடுவதும், இல்லற வாழ்விற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. இல்லற வாழ்வில் இருப்பவர்கள் கூட ஆஞ்சநேயரை தாராளமாக வழிபடலாம். ஆஞ்சநேயர் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது அவர் கையில் வைத்திருக்கும் கடா (Hanuman gada)! அந்தக் கதாயுதத்தை எடுத்து, அவருடைய தோளின் மீது வைத்து, வீரத்தோடு கம்பீரத்தோடு காட்சியளிக்கும் தோற்றம் நாம் எல்லோருக்கும் நினைவு வருகிறது. அந்த கதைக்கு அதிக சக்தி உள்ளது. ஹனுமனுக்கு தேவையான சக்தியை கொடுப்பதே, அந்த கதாயுதம் தான்.

பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில், இந்த அனுமனின் கதை, சிறிய அளவில் விற்கின்றது. அதை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தினந்தோறும் பூஜை செய்து வரலாம். அந்த கதையை பார்த்து தினந்தோறும் பூஜை செய்பவர்களுடைய மனது, உறுதியாகும். பூஜை என்றால் பெரிய அளவில் எல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரு தீபம் ஏற்றிவைத்து கதாயுதத்தை தொட்டு, கண்களில் ஒற்றிக் கொண்டால் போதும். மனபயம் நீங்கும் தேவையற்ற மன சஞ்சலத்தில் இருந்து நம்மை விடுவிக்க கூடிய சக்தி அனுமனின் கையிலிருக்கும் கதைக்கு உள்ளது. உங்களுக்கு ஓரளவிற்கு நன்றாக வரையத் தெரியும் என்றாலும், பரவாயில்லை. ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொண்டு, நான்கு பக்கங்களிலும் மஞ்சள் தடவி விட்டு, முதலில் கதாயுதத்தை உங்கள் கையாலேயே வரைந்து விட்டு, அதன் பின்பு 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதினால், எல்லா விஷயத்திலும் வெற்றி கிடைக்கும். வரைய வேண்டும் என்றால் பெரியதாக சிரமப்பட வேண்டாம். லேசாக உங்களுக்கு தெரிந்தது போல் வரைந்தால் கூட போதும். தவறு ஒன்றும் இல்லை. அ

ந்த கதாயுதத்தை உங்கள் கைகளால் வரையும் போது உங்களை அறியாமலேயே, உங்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதை, நீங்கள் வரையும் போது தான் உங்களால் உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்தால் இந்த கதாயுதத்தை டாலர் போல வாங்கி செயினில் கோர்த்து கூட போட்டுக் கொள்ளலாம். உங்களிடம் கெட்டது நெருங்கி வராது. உங்களுக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும். ஆஞ்சநேயர் உங்களுடன் இருப்பது போல ஒரு தைரியமும் தோன்றும். குறிப்பாக உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு, செயினில் இந்த கதாயுதத்தை கோர்த்து விடுங்கள். அவர்களுக்கு அது பெரிய பாதுகாப்பையும் தரும். குழந்தையிலிருந்தே மன உறுதியையும் தரும். கதாயுதத்தை கையில் வைத்துக்கொண்டால், வெற்றி கிடைத்து விடுமா என்று யோசிக்காமல், அந்த ஆஞ்சநேயரே உங்கள் கையில் உள்ளதாக சிந்தித்துப் பாருங்கள்! எங்கிருந்துதான் தைரியம் வந்தது என்றே தெரியாது. துணிச்சலோடு செயல்பட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டு, ஆஞ்சநேயரை போலவே எதிலும் தோல்வி அடையாமல், வெற்றி வாகை சூடி கொள்வீர்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.