இந்த ஒரு பொருள் உங்க வீட்டில் இருந்தால் முதலில் அதை வெளியு தூக்கி எறியுங்கள் !! இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சனை தான் வரும் !!

ஒரு சில பொருட்கள் சக்தி வாய்ந்த பொருளென்று விலை மலிவாக சமுதாயத்தில் கிடைக்கப் பெறுகிறது. அவை உண்மையில் சக்தி வாய்ந்த பொருளா? என்று கேட்டால் நிச்சயமாக சக்தி வாய்ந்த பொருளாக இருந்தால் முதலாவதாக அது மலிவாக கிடைக்காது என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். முறைப்படி உருவேற்ற படாத எந்த ஒரு சக்தி நிறைந்த பொருட்களும் பயன் தராது என்பது தான் உண்மை. மேலும் அது எதிர்வினையை உண்டாக்கி விடும் என்கிற எச்சரிக்கையும் இங்கு முன்வைக்க கூடிய அவசியம் உண்டாகிறது. அப்படி எந்த ஒரு பொருள் நம் வீட்டில் இருந்தால் நமக்கு பிரச்சனைகள் உருவாகும் என்கிற ரகசியத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். எந்திரங்கள் பொதுவாக மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் சக்தி. ஆனால் அதை முறைப்படி மந்திர உச்சாடனங்கள் செய்து அதற்குரிய சில வழிமுறைகளை கடைபிடித்து வந்தால் மட்டுமே அதன் முழுப் பயனை நம்மால் அடைய முடியும்.

நாம் கோவில்களுக்கு செல்லும் பொழுது அல்லது நகை கடைகளில் கூட இது போன்ற தெய்வ சக்தி வாய்ந்த எந்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கப் பெறுகின்றன. பத்து ரூபாய்க்கு கூட மகாலட்சுமி எந்திரமும், குபேர எந்திரம் போன்ற எந்திரங்களும் சாதாரணமாக விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கி வந்து வீட்டில் அல்லது பீரோவில் வைத்தால் பண மழை கொட்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அந்த எந்திரங்கள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. மின்சாரம் தயாரிக்க மூலப் பொருளாக இருப்பது காப்பர். காப்பருக்கு எதையும் உள்வாங்கும் தன்மை உண்டு. மந்திர உச்சாடனங்களை கிரகிக்கும் ஆற்றல் இந்த காப்பருக்கு உண்டு. நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட எந்திரங்கள் கிரஹித்து தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தும். முறையாக மந்திரங்கள் உருவேற்ற படாமல் நீங்கள் வாங்கி வந்து வீட்டில் வைக்கும் எந்திரம் நிச்சயம் எதிர்வினையை புரியும். அது போன்ற ஏதாவது எந்திரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதனால் நிச்சயம் பிரச்சனைகள் தான் வரும்.

ஒரு எந்திரத்தில் அட்சரம், எண், அமைப்பு அனைத்தும் மிகச்சரியாக இருப்பது அவசியமான ஒன்று. அதை எல்லோராலும் எளிதாக செய்து தந்து விட முடியாது. உண்மையான எந்திரங்களை தகுந்த நபர்களிடமிருந்து நீங்கள் வாங்கி வந்து வீட்டில் அல்லது தொழில் ஸ்தலங்களில் வைத்தால் நிச்சயம் நன்மைகள் உண்டாகும். ஏதாவது ஒரு எந்திரத்தை தெரியாமல் வாங்கி வந்து வீட்டில் வைத்து விட்டால் அது பிரச்சனையை தான் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு முறையாக உருவேற்றப்படாத காப்பர் எந்திரம் உங்களிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது எந்த பலனையும் நமக்கு தரப்போவதில்லை ஆனால் இது என்ன செய்யும் தெரியுமா? நீங்கள் சாதாரணமாக வீட்டில் உங்கள் கஷ்டத்தையோ அல்லது பிரச்சனையோ பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த எந்திரம் அதை உள்வாங்கும் இதனால் அந்த எந்திரம் கெட்ட அதிர்வலைகளை தான் அந்த வீட்டில் பரப்பும். இதற்காகத் தான் முறையாக உரு ஏற்றப்பட்டு மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு அதன்பின் எந்திரங்கள் கோவில்களில் உபயோகிக்கப்படுகிறது. அதனால் சாதாரணமாக நீங்கள் வாங்கியிருக்கும் எந்திரங்கள் உங்களுக்கு கெட்டதை தான் செய்யும் அதை முதலில் வீட்டில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள். தகுந்த நபர்களிடமிருந்து முறையான எந்திரத்தை வாங்கி வீட்டில், உங்கள் தொழில் ஸ்தலங்களில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மென்மேலும் நன்மைகள் உண்டாகும். வீட்டின் தலைவாசல் பகுதியில் கஜலட்சுமி எந்திரத்தை வெள்ளியில் செய்து பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்க லட்சுமி எந்திரத்தை முறையாக வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.