இந்த ஓரே ஒரு பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தாலே போதும் !! உங்களின் வேண்டுதல் அனைத்தும் இறைவனின் செவிகளுக்கு கேட்டு விடும் !!

இறைவா! ‘என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் எப்போதுதான் தீரும்? நான் வைக்கும் வேண்டுதல்கள் உன் செவிகளில் விழவில்லையா. உன் காதுகள் என்ன செவிடா?’ என்று இப்படி புலம்பியவாறு, நம்மில் சிலர், இறைவனை திட்டிக்கொண்டே வழிபடுவது வழக்கம் தான். நாம் வைக்கும் வேண்டுதல்கள் இறைவனின் செவிகளில் உடனடியாக கேட்க வேண்டுமென்றால், குறைகள் விரைவாக தீர்க்க பட வேண்டுமென்றால், வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டும் என்றால், நம்முடைய இறைவழிபாட்டில் எந்த பொருட்களை வைத்து வழிபட வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வழிபாட்டில், இறைவனுக்கு என்று சமர்ப்பிக்கும் ஒவ்வொரு பொருட்களுமே, அந்த இறைவனை வசியப்படுத்தும் தன்மை கொண்டது என்று சொல்லலாம்.

இறைவனுக்கு பிடித்தமான, வாசனை உள்ள பொருட்களை வழிபாட்டில் வைக்க வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. அந்த வரிசையில் இறைவழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான சில பொருட்களோடு, இந்த ஒரு பொருளை சேர்க்கும்போது நம்முடைய வேண்டுதலின் சக்தி, அதிகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ஒரு பொருள் நம்முடைய வேண்டுதலை உள்வாங்கி, அந்த வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் பிரபஞ்சத்தை, விரைவாக அடைந்து, அதற்கான பலனை பெற்று தரும் என்றும் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன பொருள்? நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான் அது! குங்குமப்பூ. இந்த குங்குமப்பூவை முறைப்படி, நம்முடைய வழிபாட்டில் எப்படி பயன்படுத்த போகிறோம்? தெரிந்துகொள்ளலாமா?

இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கும் குங்குமத்திற்கு எவ்வளவு அதிக ஆற்றல் இருக்கின்றதோ, அதே மகத்துவம் இந்த குங்குமப் பூவிற்கு உண்டு என்று சொன்னால் அது பொய்யாகாது. இந்த குங்குமப் பூவானது, கொஞ்சம் விலை உயர்ந்த பொருள் தான். சிறிதளவு வாங்கி உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று, இந்த வழிபாட்டை மேற்கொண்டால் போதும். ஒரு சிறிய பித்தளை சொம்பில், சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் துளசி இலை, அருகம்புல், சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து, அதோடு இரண்டு குங்குமப் பூக்களை சேர்த்து உங்களது வழிபாட்டை தொடங்குங்கள். அந்த சொம்பின் வாய்ப் பகுதியில் உங்களது உள்ளங் கைகளை வைத்துக் கொண்டு, குறைகளை இறைவனிடம் வையுங்கள்! நீங்கள் வைக்கும் வேண்டுதல் கட்டாயம் இறைவனின் செவிகளிக்கு விரைவாக சென்றடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

வேண்டுதலை வைத்த பின்பு, இந்த தண்ணீரை சிறிதளவு தீர்த்தமாக பருகலாம். மீதமுள்ள தண்ணீரை செடிகளில் சேர்த்துவிடுங்கள். நம்பிக்கையோடு இந்த முறைப்படி தொடர்ந்து 11 வார சனிக்கிழமை உங்களது, ஒரு வேண்டுதலை மட்டும் வைத்து பாருங்கள். நீங்கள் இறைவனிடம் வைத்த வேண்டுதல் நிச்சயமாக, கூடிய விரைவில் நிறைவேறும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை மனப்பூர்வமாக செய்யலாம். இறைவன், ‘நம்முடைய வேண்டுதல்களை மட்டும் தான் நிறைவேற்றி தருவதில்லை. மற்றவர்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் வேண்டிய உடனேயே நடந்து விடுகிறது!’ என்ற எண்ணத்தோடு எப்போதுமே இறைவழிபாட்டை மேற்கொள்ளக்கூடாது.’ யாருக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பது அந்த இறைவனுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் நம்முடைய வழிபாடானது, நம்பிக்கையானதாகமும், உண்மையானதாகவும் சரியான முறையில் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.