இந்த சத்தம் மட்டும் வீட்டிற்குள் கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் !! எந்த கெட்ட சக்தி உள்ளே வராது. வீட்டில் இருக்கும் நல்ல சக்தி வெளியே போகாது …

வீடு என்பது நிசப்த நிலையில் இருந்தால், அது பேய் வீடு என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் பாழடைந்த, ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய வீடுகள் தான் நிசப்தமான நிலையில் அமைதியாக இருக்கும். செங்கற்களையும், மணலையும், சிமெண்டையும், வைத்து கட்டி விட்டால் மட்டும் அது வீடு ஆகிவிடுமா? குழந்தையின் சிரிப்பு, குழந்தையின் அழுகை, உறவினர்களின் சந்திப்பு, சந்தோஷமான உரையாடல், இப்படி களகளவென்று இருந்தால் தான் அது மகாலட்சுமி குடிகொண்டிருக்கும் வீடு என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில், நம்முடைய வீட்டில் எந்நேரமும் ஒருவிதமான சத்தம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. சத்தம் என்றால் எதைக் குறிக்கின்றது.

இந்தக் காலகட்டத்தில் எல்லாம் எல்லோரது வீடுகளிலும், டிவி ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது. பாட்டு கேட்க வேண்டும் என்றால், தொலைபேசியிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு உபகரணத்தின் மூலமாகவோ பாட்டை ஒலிக்க செய்கின்றோம். சுவாமி பாடல்கள் என்றால், காலையில் ஒரு முறை ஒலிக்கச் செய்யலாம், மாலையில் ஒரு முறை ஒலிக்கச் செய்யலாம். 24மணி எந்த நேரமும் அந்தப் பாடல்களையோ, மந்திரங்களையோ நம் வீட்டில் ஒலிக்கச் செய்வது என்பது சற்று கடினமான விஷயம்தான். அப்போது, நம் வீடு எப்பவுமே ஒலி நிரம்பியதாக இருக்கவேண்டும் என்றால் என்னதான் செய்வது. வீடு மங்களகரமாக இருப்பதற்கு எப்போதுமே பெண்கள் காரணமாக இருப்பார்கள் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். அதைப் பற்றி பல ஆன்மீக தகவல்களை நாம் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையில், நம்முடைய வீட்டை நிசப்த நிலையிலிருந்து, மீட்டெடுத்து, மங்களகரமான சத்தத்தை ஒலித்துக் கொண்டே இருக்க வைக்க கூடிய சக்தியும், பெண்களிடத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது.

அதுதானே, கண்ணாடி வளையல் சப்தம், நிறைந்த சலங்கை உள்ள கொலுசு சத்தம். எந்த ஒரு வீட்டில் பெண்கள் கண்ணாடி வளையல் அணிந்து கொண்டு அவர்கள் வேலை செய்யும் போது, அந்த கண்ணாடி வளையல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றதோ, அந்த வீட்டில் நல்ல சக்தி எப்போதுமே குடிகொள்ளும். வெளியிலிருந்து வரும் கெட்ட சக்தி கூட எட்ட நின்றே ஓடிவிடுமாம்.எந்த ஒரு வீட்டில் பெண்கள் சலங்கையோடு கொலுசு அணிந்து கொண்டு இருக்கிறார்களோ, அந்த வீட்டில கெட்ட சக்தி நுழைவதற்கு வாய்ப்பே இல்லை. நாகரீகம் என்ற பெயரைச் சொல்லி, சத்தம் வராத கொலுசை அணிவது தவறு என்று சொல்லவில்லை. முடிந்தவரை, சத்தம் வராத கொலுசுகளை தவிர்த்துவிட்டு, மங்களகரமான அந்த சத்தத்தோடு கொலுசை காலில் அணிந்து பெண்கள் ஒருமுறை உங்கள் வீட்டில் நடமாடி தான் பாருங்களேன். பிளாஸ்டிக் வளையல்கள், மெட்டல் வளையல்கள் அணிவது அவரவர் விருப்பம்.

இருப்பினும், உங்கள் கையில் தங்க வளையல் இருந்தாலும், அதனுடன் இரண்டு கண்ணாடி வளையலை சேர்த்து போட்டு, வேலை செய்யும் போது அந்த சத்தத்தை அனுபவித்து தான் பாருங்களேன்! இனிமையான இல்லறம் அமைய இதுவும் ஒரு காரணம். எந்த வலையில் அணிந்தாலும் அந்த வளையலோடு இரண்டு கண்ணாடி வளையலையும் சேர்த்து அணிந்து கொள்ளுங்கள். கண்ணாடி வளையல் போட்டால் உடைந்து போகிறது. அது அபசகுணமாக தோன்றுகிறது என்று எப்போதுமே நினைக்காதீர்கள். கண்ணாடி வளையல் என்பதே உடைவதற்காகத் தான். அப்படி உடைந்தால் திருஷ்டி கழிந்து விட்டது என்று அர்த்தம். கட்டாயம் நம்முடைய வீடு மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த வீடாக மாறுவதற்கு இந்த இரண்டு ஒலிகளுக்கும் பங்கு அதிகமாகவே உள்ளது. செயற்கை முறையில் ஒலி எழுப்பும் கருவிகளை வாங்கி வீட்டின் முன்பு மாட்டி, காற்று வீசும் போது அது ஒலித்து எழுப்பும் சத்தத்தை விட, அழகான பெண்களின் கையிலும் காலிலும் ஒலிக்கும் இந்த சத்தம் இன்னும் அழகாகத் தான் இருக்கும்.