இந்த தெய்வங்கள் எல்லாம் நின்ற நிலையில் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் !!

நம் வீட்டு பூஜை அறை தான் நமக்கு கோவில். அதை சுத்தமாகவும், பத்திரமாகவும், பக்தியோடும், அறியாமலும் கூட சில தவறுகளை செய்யாமல் பாதுகாப்பது நம்முடைய கடமை. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையானது இறைவனின் கையில் தான் உள்ளது. எல்லா தெய்வங்களும் நமக்கு நன்மை செய்யும் தெய்வங்களாக தான் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சில காரண காரியங்களுக்காக, நம் முன்னோர்கள் சில தெய்வப் படங்களை இப்படி வைக்கக்கூடாது என்று நம் சாஸ்திரத்தில் கூறியுள்ளார்கள். இப்படி வைத்தால் பிரச்சனைகள் வரும் என்று தெரிந்து, அதை சோதித்துப் பார்ப்பது விபரீதமான ஒன்றுதான். செய்ய வேண்டாம் என்றால், செய்யாமல் இருப்பதே நல்லது. சரி. நின்றநிலையில் எந்த தெய்வங்களை எல்லாம் நம் வீட்டில் வைக்கக் கூடாது என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

பிள்ளையார் என்றாலே பெரிய தொப்பையை வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தால் தான் அழகு. ஆனால் சில பிள்ளையார் சிலைகளும், சில பிள்ளையார் படங்களும் நின்றபடி அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதைப் பார்ப்பவர்களுக்கு வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் மனதளவில் தோன்றும். ஆனால் விநாயகரை நம் வீட்டில் நின்றபடி வைப்பது அவ்வளவு சரியானது அல்ல என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை நின்ற நிலையில் இருக்கும் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாமா இருப்பது சிறப்பான ஒன்று. – Advertisement – விநாயகரும் லட்சுமியும் ஒன்றாக இருந்தால் அவர்கள் இருவருக்கும் இடையேயிருக்கும் இடைவெளி 10 இன்ச் தான் இருக்க வேண்டும். அதிக இடைவெளியில் விநாயகரையும் லட்சுமியையும் வைக்கக்கூடாது.

அதாவது விநாயகர் சிலை உங்கள் வீட்டில் இருக்கிறது. லட்சுமி சிலையும் உங்கள் வீட்டில் இருக்கிறது. இப்படி இருந்தால் இரண்டு சிலைகளையும் அருகில் வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். சரஸ்வதி தேவியை வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. வீட்டில் நிம்மதியான சூழ்நிலை, நேர்மறை ஆற்றல், சந்தோஷம் எல்லாம் நிறைந்திருக்கும். இப்படியிருக்க சரஸ்வதியை நின்ற நிலையில் வைத்துக் கொள்ளாமல், அமர்ந்த நிலையில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.வீட்டில் வளர்ந்த, நின்ற நிலையில் இருக்கும் கிருஷ்ணரை வைத்து வழிபடுவதை விட, குழந்தை பருவத்தில் இருக்கும் கிருஷ்ணரை வைத்து வழிபடுவது மிகவும் சிறந்தது. தவழ்வது போலவும் அல்லது அமர்ந்திருப்பது போலவும் குழந்தை கிருஷ்ணரை வைத்து வழிபட்டால், வீட்டில் குழந்தை செல்வத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது.

நம் வீட்டுக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நலமுடனும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நம் வீட்டில் இந்த தவறை எல்லோரும் செய்கிறோமா என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு பெரிய தவறு. அதாவது நாம் வீட்டில் இல்லாத சமயத்தில், பூஜை அறையாக இருந்தாலும் சரி, பூஜை அலமாரியுக இருந்தாலும் சரி, அதை இழுத்து மூடி தாழ்ப்பாள் போட்டோ அல்லது பூட்டு போட்டோ வைத்துவிட்டு வெளியே செல்லக்கூடாது. அதாவது இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் செல்வதாக இருந்தாலும் இப்படி செய்வது மிகப்பெரிய தவறு. வெறுமனே சாத்தி இருக்கலாம். லேசாக இடைவெளிவிட்டு சாத்துவது இன்னும் சிறப்பு. சிலர் வீட்டில் எல்லாம் பூஜை அறையில் வெள்ளி பொருட்கள் அதிகமாக வைத்து வழிபடுவார்கள். அதை பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி பூஜை அறைக்கு பூட்டு போட்டு கூட வைத்திருப்பார்கள். இப்படி தயவுசெய்து செய்யாதீர்கள். இது ஒரு மிகப்பெரிய தவறாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.