இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள் ?? உங்கள் வீட்டு வாசப்படியில் எதை கட்டித் தொங்கவிட்டால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் திரும்பும் !!

நம்முடைய வீட்டில் நில வாசப்படி என்பது மிகவும் முக்கியமான ஒரு இடம் என்று சொல்லலாம். ஏனென்றால், வீட்டின் நுழைவு வாயில் அது. நம் வீட்டிற்குள் நுழையும் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். குறிப்பாக, நம்முடைய குலதெய்வமும், அதிர்ஷ்ட தேவதைகளும் வாசம் செய்யும் இந்த நில வாசப்படியில், நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய, உங்களுக்கு தொடர் வெற்றியை ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு பொருளை வைக்கும் பட்சத்தில் அதிகப்படியான நன்மை கிடைக்கும். நீங்கள் எந்த தேதியில் பிறந்து இருக்கிறீர்கள்? உங்களுக்கு எதை நில வாசப்படியில் வைத்தால் நல்லது நடக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பின்வரும் பரிகாரக் குறிப்புகள், நீங்கள் ஒன்றில் இருந்து ஒன்பதாம் தேதி வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பின்பற்றலாம். மற்ற தேதிகளில் பிறந்தவர்களும், கூட்டு எண் ஒன்றிலிருந்து ஒன்பதிற்க்குல் எது இருக்கின்றதோ, அதைப் பின்பற்றி கொள்ளவும். 1ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் ஒன்றில் இருந்தாலும், நீங்கள் செம்பருத்தி பூவின் வேரை சிறிதளவு எடுத்து மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டு வாசல் படியில் மாட்டிவிட வேண்டும். 2ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலோ அல்லது உங்களுடைய பிறந்த தேதியின் கூட்டு எண் இரண்டில் இருந்தாலும், உங்கள் வீட்டு வாசற்படியில் வெள்ளெருக்கு வேரை மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடுவது மிகவும் நல்லது. குறிப்பாக உங்கள் லக்னம் சந்திரனாக இருந்தால், இது உங்களுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டத்தை தேடி தரும். இரண்டாம் தேதியில் பிறந்தவர்களுக்கு கண் திருஷ்டி அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

குறிப்பாக இரண்டாம் தேதியில் பிறந்த பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், இந்த வெள்ளெருக்கு வேரை கையில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும் போதும் பர்ஸ்ஸில் வைத்து எடுத்துக் கொண்டு செல்லலாம். தேவையற்ற கண் திருஷ்டி படாமல் தடுக்கும். 3ஆம் தேதியில் பிறந்தவர்கள், ஆலமர விழுதை மஞ்சள் துணியில் கட்டி வாசல்படியில் தொங்கவிடலாம். அப்படி இல்லை என்றால் இல்லை என்றால், ஆலமர இலைகளை நூலில் கட்டி கூட நில வாசப்படியில் தொங்கவிட்டு கொள்ளலாம். 4ஆம் தேதியில் பிறந்தவர்கள் நிலை வாசப்படியில் சோற்றுக்கற்றாழையை கட்டி தொங்க விடுவது நல்ல பலனை தரும். 5ஆம் தேதியில் பிறந்தவர்கள் சிறிதளவு பச்சை பயிரை எடுத்து, சிவப்புத் துணியில் கட்டி, நில வாசப்படியில் தொங்க விடுவது மிகவும் நல்லது. இவர்கள் துளசியையும் நில வாசப்படியில் சொருகி வைக்கலாம். கருந்துளசியை இவர்கள் பர்சில் வைத்துக் கொண்டாலும் அதிர்ஷ்டம் தேடித்தரும்.

6ஆம் தேதியில் பிறந்தவர்கள், மஞ்சள் கொம்பை, மஞ்சள் துணியில் கட்டி நில வாசப்படியில் தொங்க வைப்பது மிகவும் நல்லது. 7ஆம் தேதியில் பிறந்தவர்கள் நவதானியத்தை மஞ்சள் துணியில் கட்டி நில வாசப்படியில் தொங்க விடுவது மிகவும் நல்லது. 8ஆம் தேதியில் பிறந்தவர்கள் வன்னி மரத்து வேரை, ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலைப்படியில் தொங்க வைப்பது மிகவும் நல்லது. குறிப்பாக ஏழரை சனியில் பிறந்தவர்களுக்கும், இந்த பரிகாரம் நல்ல பலனைக் கொடுக்கும். ஏழரை சனி நடந்து கொண்டு இருப்பவர்கள் எந்த தேதியில் பிறந்திருந்தாலும் வன்னி மரத்தின் வேரை தங்களுடைய வீட்டு நிலை வாசற் படியில் கட்டி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக 26 ஆம் தேதியில் பிறந்தவர்கள் வீட்டில் கருவேப்பிலை மரத்தினுடைய வேரை, மஞ்சள் துணியில் கட்டி வைத்தால் அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும். கருவேப்பிலை மரத்திலிருந்து வடக்குப் பக்கம் நோக்கி செல்லும் வேரைக் கொண்டு வந்து, உங்கள் வீட்டில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள் மிகவும் நல்லது. 9ஆம் தேதியில் பிறந்தவர்கள் தங்களுடைய வீட்டு வாசல்படி முன்னால் எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடுவது மிகவும் நல்லது. இவர்கள் வாசலில் பைரவர் படத்தை வைக்கும் பட்சத்தில் அதிகப்படியான அதிர்ஷ்டம் வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.