இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பானையில் மட்டுமல்ல, வீட்டிலும் நிறைய தங்கம் சேர்க்கலாம் இதை மட்டும் செய்தால் !!

மற்ற நட்சத்திரக்காரர்களை விட இந்த நட்சத்திரக்காரர்களுக்கு குறிப்பிட்ட ஒரு யோகம் உண்டு என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறுவார்கள். அது தங்க நகை சேர்ப்பதற்கான யோகம் தான். தங்க நகைகள் இந்த நட்சத்திரக்காரர்கள் தவிட்டுப் பானையில் கூட சேர்ப்பார்கள் என்கிற ஜோதிட பழமொழி உண்டு. ஆனால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லோரும் தங்கம் சேர்கின்றனர் என்று கூறிவிட முடியாது. ஏன் அவர்களால் தங்க நகை சேர்க்க முடியவில்லை? இந்த பழமொழி உண்மையில் எதைக் குறிக்கிறது? எந்த நட்சத்திரக்காரர்களுக்கு இந்த யோகம் கிடைக்கும்? இது போன்ற வினாக்களுக்கு விடையை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். ‘அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானை எல்லாம் பொன்’ என்கிற பழமொழி ஒன்று உண்டு. அவிட்டத்தில் பிறந்தவர்கள் யோகக் காரர்களாகவும், தங்களது வீட்டில் தவிட்டுப் பானையில் எல்லாம் பொன்னும், பொருளும் சேர்த்து வைக்கும் அளவிற்கு அதிர்ஷ்டங்கள் வரும் என்றும் கூறப்படுகிறது. இது அவிட்டத்தில் பிறந்த எல்லோருக்கும் பொருந்துமா?

என்று கேட்டால், பெரும்பாலும் பொருந்துவதில்லை. உண்மையில் கூறப் போனால் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் அவர்கள் பல போராட்டங்களையும், கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். போதும் போதும் என்கிற அளவிற்கு பொன் வருகிறதோ! இல்லையோ! ஆனால் போதும் போதும் அளவிற்கு கஷ்டங்கள் விடாது துரத்திக் கொண்டிருக்கிறது. இது தான் அவிட்ட நட்சத்திரக்காரர்களின் உண்மையான நிலை. ஏன் இந்த முரண்பாடு? அப்படி என்றால் இந்த ஜோதிட பழமொழி பொய்யா? என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் இருக்கலாம். அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானை எல்லாம் பொன் என்கிற பழமொழி உண்மை தான். ஆனால் ஆவணியில் வருகின்ற அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கூறப்பட்ட பழமொழி தான் இது. ஆவணி அவிட்டத்தில் பிறந்தவர்கள் தங்கம் சேர்க்கும் வாய்ப்புகளை நிறைய பெற்றிருப்பார்கள் என்பது ஜோதிட கூற்று. இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆனாலும் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தாலே அதிர்ஷ்டம், யோகம் எல்லாம் வரும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆவணி அவிட்டத்திற்கு தெய்வீக சக்தி உள்ளது. இந்த நாளில் பிறந்தவர்களுக்கு பிற்காலத்தில் பொன்னும், பொருளும் குவிக்கக்கூடிய வாய்ப்புகள் வருமாம். அவிட்ட நட்சத்திரத்தில் மற்ற மாதத்தில் பிறந்தவர்களுக்கும், அவிட்டத்தை தவிர மீதி இருக்கும் மற்ற 26 நட்சத்திரக்காரர்களுக்கும் பொன் பொருள் சேர, மற்றவர்கள் முன்னிலையில் கௌரவமான நிலையில் வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்து வரலாம். இந்த பரிகாரத்தை அவிட்ட நட்சத்திரத்தில் செய்வது முக்கியம். அவிட்ட நட்சத்திரம் வரும் நாளன்று நல்ல நேரம் பார்த்து ஒன்பது அகல் விளக்குகளில் பிள்ளையார் பிடித்து அதனுள் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களை மறைத்து வைக்க வேண்டும். இந்த ஒன்பது ஒருரூபாய் நாணயங்கள் உள்ள பிள்ளையாரை அந்த ஒன்பது அகல் விளக்குகளில் வைக்க வேண்டும். இன்னொரு மஞ்சள் பிள்ளையாரை, பெரிய பிள்ளையாராக பிடித்து அதில் விநாயகரை ஆவாகனம் செய்ய வேண்டும். அது அளவில் சற்று பெரியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிள்ளையாருக்குள் உங்களிடமிருக்கும் குண்டுமணி தங்கம், வெள்ளி, முத்து போன்ற ஏதாவது ஒரு ரத்தினத்தை அல்லது நகையை புதைத்து வையுங்கள். இதற்கு தீப, தூபம் காண்பித்து, கற்பூர ஆரத்தி எடுத்து தினமும் பூஜை செய்ய வேண்டும். பின்னர் நன்கு காய்ந்து விடும். நீங்கள் எப்பொழுது ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்கிறீர்களோ! அப்பொழுது இந்த 9 நாணயங்களை மட்டும் எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து திருப்பதி உண்டியலில் எட்டு நாணயங்களை போட்டு விட்டு, மீதமிருக்கும் ஒரு நாணயத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வந்து சமைக்கும் அரிசிப் பானையில் பத்திரமாக போட்டு வைக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்தால் விரைவிலேயே எதிர்பார்த்த தங்க நகைகளை உங்களால் சேகரித்து விட முடியும். இதை ஆடம்பரத்துக்காக செய்யாதீர்கள். உங்கள் மகளுக்கு, மகனுக்கு திருமணம் செய்ய வேண்டி நகை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள், அல்லது மற்றவர்கள் முன்னிலையில் கவுரவமாக இருப்பதற்கு கொஞ்சமாவது தங்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் நல்ல பலனை அடைய முடியும். அதிலும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் ஜோதிட வாக்கு உண்மையாக பலிக்கும் என்பது நம்பிக்கை.