இந்த பூஜையை மட்டும் நீங்கள் தினம்தோறும் உங்கள் வீட்டில் செய்து வந்தால் !! கடன் வாங்கும் நிலைமையே உங்களுக்கு வராது !!

முதலில் நமக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்றால், அது கட்டாயம் கடன் இல்லாத ஒரு சூழ்நிலையில் தான் அமையும். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே போதும். ஆடம்பர செலவிற்காக அனாவசியமாக கடனை வாங்கி, தேவையில்லாத பாரத்தை நம் தலையில் ஏற்றிக் கொண்டு, நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமே கிடையாது. கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை என்பது நம்முடைய வீட்டில் வரவே கூடாது என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய வருமானத்திற்கு தகுந்தவாறு செலவு செய்யவேண்டும். கையில் வரக்கூடிய பணத்தை, தக்கவைத்துக்கொள்ளும் சூட்சுமங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். பணத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சூட்சமம் என்றால், மகாலட்சுமியை நம் வீட்டில் வாசம் செய்ய வைக்கும் வழிபாட்டு முறைதான் அது.

அந்த காலத்திலேயே, நம்முடைய முன்னோர்கள் மகாலட்சுமியை வீட்டில், நிரந்தமாக தங்க வைப்பதற்கு சில முறைகளை கடைபிடித்து வந்தார்கள். அதில் சிலவற்றை நாம் இப்போது கடைபிடிக்கிறோம். சிலதை கடைபிடிக்க முடியாத சூழ்நிலை. பரவாயில்லை! இந்த பதிவில் குறிப்பிடும் இந்த முறைகளை நீங்கள் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் தெரியும். காலையில் வாசல் தெளிக்கக்கூடிய தண்ணீரில், கொஞ்சம் மஞ்சளை கலந்து, அதன்பின் அந்த தண்ணீரில் வாசல் தெளிக்க வேண்டும். எப்போதுமே தண்ணீரை தெளித்து விட்டு, வாசல் கூட்டும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சில பேர் வாசலைக் கூட்டி விட்டு தண்ணீர் தெளிப்பார்கள் அல்லவா? அப்படி செய்யாமல் எப்போதுமே தண்ணீர் தெளித்து அதன் பின்பு வாசல் கூட்டுவது நல்லது.

அடுத்தபடியாக முடித்தவரை தினம்தோறும் கோலம் போட்டுவிட்டு, காவியால், இரண்டு கோடு போட்டால் நம்முடைய வீட்டிற்கு நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. செம்மண் என்று சில பேர் சொல்லுவார்கள். தினம்தோறும் உங்களால் கோலத்தில் காவி பயன்படுத்த முடியவில்லை என்றாலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது காவி சேர்த்த கோலம் போடுவது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது. முடிந்தவரை அரிசி மாவை, கோலமாவில் கலக்காமல் வெறும் அரிசி மாவால் கோலம் போடுவது வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும். வாசலில் கோலம் போடுவதற்கு இந்த சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றினால் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தேவியானவள் நிரந்தரமாக வருகை தந்து நிரந்தரமாக தங்குவாள். நமக்கு கடன் வாங்கும் நிலைமையும் கட்டாயம் ஏற்படாது. அடுத்தபடியாக உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சின்ன குறிப்பை பின்பற்றி வாருங்கள்.

நீங்கள் கோலம் போடும் பச்சரிசி மாவில் ஒரு சிட்டிகை போல மஞ்சள் தூளை கலந்து அந்த மாவால் பூஜைஅறையில் ‘ஸ்ரீம்’ என்ற எழுத்தை எழுத வேண்டும். அதன் பின்பாக வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். 1008 முறை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். முடிந்தவரை வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது இந்த பூஜையை செய்ய பாருங்கள். சாதாரணமாக உங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை போலவே இதை செய்யலாம். முடிந்தால் வெள்ளை நிறத்தில் பால் பாயாசம் செய்து, ஏலக்காய் போட்ட அந்த பாயாசத்தை வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கும் படைத்து, இப்படி பூஜை செய்வது நமக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு மூன்று வெள்ளிக்கிழமை இந்த முறைப்படி உங்களுடைய வீட்டில் பூஜை செய்து தான் பாருங்களேன். நல்ல முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில் நமக்கு நல்லது தானே! அனைவருக்கும் மகாலட்சுமி கடாட்சம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.