இந்த மஞ்சள் நிற பூவுக்குள் இவ்ளோ பெரிய ரகசியம் ஒளிந்துள்ளதா ?? உங்கள் வாழ்க்கையை, தங்கம் போல பிரகாசமாக மாற்றக்கூடிய அந்தப் பூ, எந்த பூ தெரியுமா ??

பொதுவாக தங்க நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் நிற பூக்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி என்பது அதிகமாகவே இருக்கும். இறைவனுக்கு சூட்டப்படும் மஞ்சள் அரளி பூ, சாமந்திப் பூ, இப்படிப்பட்ட பூக்களை தொடர்ந்து நம் பூஜைக்காக பயன்படுத்தி வந்தாலும் சரி நம் தலையில் சூடிக் கொண்டாலும் சரி அதன்மூலம் நமக்கு அதிகப்படியான அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு பூவைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை தேடித் தரப்போகும் அந்த பூ, எந்த பூ? அதை பரிகாரத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா.அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் அள்ளித் தரக்கூடிய சக்தி ஆவாரம் பூ விற்கு அதிகமாகவே உள்ளது. இந்த ஆவாரம் பூ விற்கு மருத்துவ குணங்கள் எவ்வளவு அதிகமோ, அதே அளவிற்கு மகத்துவமும் அதிகம் உண்டு என்று சொல்கிறது சாஸ்திர குறிப்புகள்.

சாதாரண பூக்கள் விற்கும் கடையில் இந்தப்பூ கிடைப்பது கொஞ்சம் கடினம் தான். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்து எப்படியாவது வெள்ளிக்கிழமைகளில் இந்தப் பூவைக் கொண்டு வந்து உங்களுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். கட்டாயம் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் நிறைவேறாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தாலும், காரியத்தடைகள் இருந்தாலும், பண பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், வேலை இல்லை, எடுக்கின்ற முயற்சி எல்லாம் தோல்வி, இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல் மூலம், தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் உங்களுக்கு உடனடி பலனை கொடுக்கக்கூடிய ஒரு சக்தி இந்த ஆவாரம் பூவுக்கு உள்ளது. பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அகலமான ஒரு தட்டில் இந்த ஆவாரம்பூவை வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு மரப் பலகையின் மீது நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் முன்பாக இந்த ஆவாரம்பூ நிரப்பப்பட்ட தட்டு இருக்கட்டும். உங்களது கைகளையும் பூக்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். வலது கையை மட்டும் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. அல்லது இரு கைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு நிறைவேறாத காரியம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? ஏதாவது ஒரு பிரச்சினையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரச்சனை சரியாக வேண்டும் என்று நேர்மறை எண்ணத்தோடு வேண்டிக்கொண்டு வேண்டுதலை வைக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு கடன் தொல்லை இருக்கின்றது. கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால், ‘விரைவாக கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்’ என்று மனதார பதினோரு முறை உச்சரித்தால் கூட போதும். அதன் பின்பு அந்த ஆவாரம்பூவில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொள்ளுங்கள்.

பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் கொஞ்சம் எடுத்து, பூ வைத்திருக்கும் தாம்பாளத் தட்டில் ஊற்றி கொண்டால் கூட போதும். இப்போது அந்தத் தண்ணீரை உங்களது வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். உங்கள் வீட்டு உறுப்பினர்களின் மீதும் தெளிக்கலாம். உங்கள் தலையின் மீது தெளித்துக் கொள்ளலாம். மீதமிருக்கும் அந்த ஆவாரம்பூவை, ஒரு உருளியில் போட்டு, தண்ணீர் ஊற்றி உங்களுடைய வீட்டின் வரவேற்பறையில் வடகிழக்கு மூலையில் வைத்துக்கொள்வது சிறப்பைத்தரும். வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஆவாரம் பூவை வைத்து உங்களது வேண்டுதல்களை இந்த முறைப்படி சொல்லிப் பாருங்கள். நிச்சயம் இந்த வேண்டுதல்களுக்கான தீர்வு, உங்களுக்கு விரைவாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆவாரம்பூ வண்ணத்தில் உங்களுடைய வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்த பரிகாரம் நிச்சயம் கை மேல் பலன் கொடுக்கும்.