இந்த மாத சம்பளம் உங்கள் கைக்கு வந்து விட்டதா ?? அந்த சம்பளம் வீணக்காமல் இருக்க முதலில் இப்படி செய்யுங்க !!

எந்த மாத சம்பளம் நம் கைகளுக்கு வந்தாலும், EMI பிடித்தம் போக, பற்றாக்குறை பட்ஜட்டில் தான், கட்டாயம் நம்முடைய குடும்பம் நடக்கப்போகிறது. இது தான் இன்றைக்கு, நாம் எல்லோருடைய நிலைமையும் கூட! சரி, கொஞ்சம் சங்கடமான விஷயம் தான் இது. நம் கைகளுக்கு வரக்கூடிய குறைவான வருமானமாக இருந்தாலும் கூட, அந்த வருமானம் வீண் விரயம் ஆகாமல், மருத்துவச் செலவு ஆக்காமல், பணத்தை சேமித்து வைக்க என்ன பரிகாரத்தை, எப்படி செய்யவேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான ஒரு பரிகாரம். குபேரரை நினைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை, நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு பணம் சேரும் என்பதில் சந்தேகமே இல்லை. பணம் சேர்கிறதோ இல்லையோ, உங்கள் கைக்கு வரும் பணம், கட்டாயம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும்.

கட்டாயம் இந்த பரிகாரம் செய்ய, செம்பு சொம்பு அல்லது செம்பு டம்ளர் அல்லது செம்பினால் செய்யப்பட்ட ஏதோ ஒரு பாத்திரம் தான் தேவை. செம்பினால் செய்யப்பட்ட ஒரு பாத்திரத்தில், நிறைய நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள் பொடியையும் போட்டு கொள்ளுங்கள். பச்சை குங்குமம் என்று சொல்வார்கள் அல்லவா? குபேரரின் குங்குமம். பச்சை நிற குங்குமத்தை இந்த தண்ணீரில் போடுவது மிக மிக சிறப்பு. கடைகளில் விற்கும் பச்சைநிற குங்குமத்தை சிறிதளவு வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இப்போது, செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள், பச்சை நிற குங்குமம், வாசனை நிறைந்த ஏதாவது ஒரு பூவை மிதக்க விட்டு விடுங்கள். அடுத்ததாக, நீங்கள் இந்த மாதம் வாங்கிய சம்பளத்திலிருந்து, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே வைத்து செய்யலாம்.

உங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜை செய்யும்போது, இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா உறுப்பினர்களது கையிலும், ஒவ்வொரு ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்துவிடுங்கள். பூஜையறையில் தீபத்தை ஏற்றி வைத்து, குபேரரையும், மகாலட்சுமியையும், விஷ்ணு பகவானையும் மனதார வேண்டிக்கொண்டு, ‘இந்த மாதம் வாங்கிய சம்பளம் வீண்விரயம் ஆகக்கூடாது. சேமிப்பில் இருக்க வேண்டும்’ என்று நினைத்து, உங்கள் கையில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். இத்தனை நாணயங்கள் தான், அந்தச் சொம்பு தண்ணீரில் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் அத்தனை நாணயங்களைப் போட்டு வையுங்கள். உங்கள் வீட்டில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேரும் ஒரு ரூபாய் நாணயத்தை, அந்த தண்ணீரில், போடலாம். இப்போது இந்த பூஜை நிறைவடைந்து விட்டது. இந்த சொம்பை என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய வடகிழக்கு மூலையில் இந்தக் சொம்பை எடுத்து வைத்துவிடுங்கள். அன்றைய ஒருநாள் இரவு மட்டும், அந்தச் சொம்பு அங்கேயே இருக்கட்டும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை செடிக்கு ஊற்றி விட்டு, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து பச்சை நிறத் துணியில், ஒரு முடிச்சுப் போட்டு கட்டிக் உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். மாதம்தோறும் இதேபோல் பரிகாரத்தை செய்து, அந்த ஒரு ரூபாய் நாணயங்களை, அதே துணியில் கட்டி சேமித்து வரலாம். 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, உங்களால் எப்போது முடிகிறதோ, அந்த பச்சை துணியில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை, முடிந்தால் உங்கள் குலதெய்வக் கோவில் உண்டியலில் சேர்த்து விடலாம். இல்லை என்றால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் உண்டியலில் சேர்த்து விடலாம். உங்களுக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து, ஒரு பத்து ரூபாயையாவது, இயலாதவர்களுக்கும் உதவி செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இது நம்முடைய பரம்பரைக்கே புண்ணியத்தை சேர்க்கும். பணத்தையும் சேர்த்து கொடுக்கும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! நிச்சயம் உங்களது பணம் வீன் விரையமாக வாய்ப்பே இல்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.