இந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்வில் நடந்தால் பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்துமாம் தெரியுமா ??

ஜோதிட ரீதியாக ஒரு சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் பொழுது அவைகள் ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துவதன் அறிகுறியாகவே இருக்கும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி நமக்கு முன்கூட்டியே உணர்த்தும். இதைத் தான் சாஸ்திரத்தில் சகுனம் பார்ப்பது என்று கூறுகிறார்கள். இதில் நாம் இதுவரை அறிந்திராத சில சகுனங்களும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள போகின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். உங்கள் வீட்டின் தலைவாசல் கதவில் விரிசல் அல்லது ஏதாவது சிறிய பாதிப்புகள் ஏற்பட்டால் வீட்டில் மிகப்பெரிய கடன் சுமை ஏற்படும் என்று ஜோதிட ரீதியான சாஸ்திரங்கள் கூறுகிறது. தேவையில்லாத கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

அது போல் உங்களுடைய தங்க நகைகளை அடிக்கடி எங்காவது வைத்து விட்டு தேடுவது மாதிரியான சூழ்நிலை வந்தால், அல்லது தங்க நகைகள் தொலைந்தால் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலம் நீங்கள் ஏமாறப் போகிறீர்கள் அர்த்தமாம். உங்கள் செல்வத்தை ஏதாவது ஒரு வழியில் நீங்கள் இழக்க நேரிடும் அபாயம் ஏற்படும்.உங்கள் வீட்டில் தண்ணீர் மேலிருந்து சொட்டுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அதாவது வீட்டின் மேற்கூரையில் நீங்கள் தண்ணீர் டேங்க் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து ஒழுகினாலும் அல்லது வேறு வகையில் நீர் மேல் கூரையிலிருந்து சொட்டுவது போல் ஏற்பட்டாலும் பணக்கஷ்டம் வர இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாம். வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள் அல்லது வேறு சில உயிர்கள் இறக்க நேர்ந்தால் தொழில் ரீதியான பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். திடீரென நம் உடம்பில் புதிதாக கருப்பு மச்சம் தோன்றினால் இதுவரை நீங்கள் சேர்த்து வந்த செல்வங்கள் கரையும் என்று ஜோதிடம் கூறுகிறது. உங்கள் தொழில் சார்ந்த நண்பர்கள் மூலம் எதிர்பாராத வகையில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதற்கு அறிகுறியாக அந்த வீட்டில் இருப்பவர்களில் யாராவது ஒருவருக்கு பேசும் பொழுது திடீரென அதிகப்படியான உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் வீட்டில் பண கஷ்டம் வர இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

திடீரென அதிக பதட்டமும், வயிறு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் பொழுது நீங்கள் பண நெருக்கடியை சந்திக்க இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு வீட்டில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும் திடீரென சம்பந்தமே இல்லாத பிரச்சனைகள் அடிக்கடி நேர்ந்தால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஜோதிட சாஸ்திரம் அறிகுறியாக உணர்த்துகிறது. இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் வீட்டில் பணக்கஷ்டம் அல்லது பண நெருக்கடி, நஷ்டங்கள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. எனவே இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.