இந்த 2 பேருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் போதும் !! எடுக்கும் முயற்சிகள் எந்த தடையும் இல்லாமல் 100% வெற்றி பெறும் !!

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்கிற சந்தேகம் மற்றும் பயம் இனி தேவை இல்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் அல்லது காரியம் வெற்றியாக வேண்டும் என்று நினைப்பவர்கள், அது எந்த காரியமாக இருந்தாலும் சரி, இதை மட்டும் செய்தாலே, உங்கள் காரியம் 100% வெற்றி பெறும். நாம் அப்படி என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம். ஒரு சிலருக்கு புதிய தொழில் துவங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கான எல்லா திட்டங்களும் தீட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்குமா? என்கிற பயம் தான் அவர்களை பின் வாங்க வைக்கும். உங்களுக்கு தன்னம்பிக்கையும், இந்த பயத்தை போக்கவும் இந்த பரிகாரம் நல்ல பலன் தரும். முழுமுதற் கடவுளாக, விக்னங்களை தீர்ப்பவராக விநாயகர் நமக்கு அருள் புரிகின்றார்.

கூப்பிட்ட குரலுக்கு விநாயகர் ஓடோடி வருவார் என்பார்கள். அது போல் பசுக்களுக்கு இதை செய்வதன் மூலம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடையாது, வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பார்கள். விநாயகர் மற்றும் கோமாதா வழிபாடு தான் நாம் செய்ய இருக்கின்றோம். இந்த இருவருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் நம்முடைய காரியம் எந்த தடையும் இல்லாமல் வெற்றி பெறும் என்பது தான் உண்மை. புதிய தொழில் துவங்குபவர்கள் இதை செய்து விட்டு துவங்கினால் தொழில் அமோகமாக நடைபெறும். அது போல் சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்பவர்களும் நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற பிரார்த்தனையை முன்வைப்பார்கள். உங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம், திருமணம், சடங்கு, சம்பிரதாயம் என்று எந்த நல்ல விஷயம் நடந்தாலும் அதில் எந்த தடைகளும் இல்லாமல் சிறப்பாக நடக்க இந்த பரிகாரத்தை நீங்களும் தாராளமாக செய்யலாம். நிச்சயம் 100% விநாயகர் உங்களுக்கு வெற்றியைத் தருவார்.

நம்பிக்கையுடன் செய்து வந்தாலே போதும். உங்கள் காரியம் வெற்றி அடைவதற்கு முதலில் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடையுங்கள். அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைத்தால் உங்களுக்கு வர இருக்கும் தடங்கல்கள் யாவும் சிதறி விடும் என்பார்கள். காரிய வெற்றிக்கு சிறந்த பரிகாரமாக விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பது இருக்கும். அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது இது தான். உங்கள் கண்களுக்குத் தென்படும் பசுவிற்கு அதாவது கோமாதாவிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் பொழுது அந்தப் பசு அமைதியாக அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டால் உங்களுடைய காரியம் வெற்றி தான் என்பது பொருள் ஆகும். பசுவிற்கு வாழைப்பழம் கொடுப்பதால் குலதெய்வ ஆசீர்வாதமும், பித்ருக்களின் ஆசீர்வாதமும் ஒருசேர உங்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த இருவரின் ஆசீர்வாதம் கிடைக்கும் முன்பாக உங்களுக்கு முதல் கடவுளான விநாயகரின் ஆசீர்வாதம் பெறவே சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது. ஒரே ஒரு தேங்காயை உடைத்து விட்டு செல்வதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் ஆகப்போவதில்லை. எடுக்கும் காரியம் வெற்றி பெற சிதறு தேங்காய் உடைத்து விட்டு, பசுவிற்கு வாழைப்பழம் கொடுத்து விட்டு தாராளமாக நீங்கள் எந்தவித பயமும் இல்லாமல் தயக்கம் இல்லாமல் செல்லலாம். தொழில், சுபகாரியம் மட்டுமல்ல எந்த காரியமானாலும் இந்த பரிகாரத்தை செய்து விட்டு சென்றால் ஜெயம் நிச்சயம்.