“இந்த APP எல்லாம் வச்சிருந்தா உடனே டெலிட் பண்ணுங்க” – டிஜிபி சைலேந்திரபாபு கடைசி எச்சரிக்கை !!

ஆன்லைன் லோன் ஆப் மூலம் பொதுமக்கள் பலர் கடன் வாங்கி பல மடங்கு வட்டி செலுத்தி மோசடியில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதள பக்கத்தில் நேற்று (ஜூன்15) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செயலியை பதிவிறக்கம் செய்யும்போது செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளை அளிக்கின்றனர். பின்னர் வாங்கிய கடனைவிட பல மடங்கு வட்டி கேட்டு அந்த கும்பல் மிரட்டி, அதன் பிறகு அவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பப்படும் என மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin