இப்படி மட்டும் பெண்கள் தானம் செய்யவே கூடாது !! பெண்கள் தானத்தை எப்படி செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது !! நீங்களும் தெரிஞ்சுக்கோங்க !!

தானத்தில் எத்தனையோ வகையான தானங்கள் இருந்தாலும், ‘தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்லுவார்கள்’. தானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், மனத் திருப்தியோடு எந்தவிதமான மன சஞ்சலமும் இல்லாமல், அந்த தினத்தை நாம் செய்துவிட வேண்டும். அவ்வளவு தான்! சரி, பெண்கள் கையால் தானம் செய்வதை பற்றி, நம்முடைய சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெண்கள் எந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். குறிப்பாக எந்தெந்த பொருட்களை தவறான முறையில் தானம் கொடுக்கக்கூடாது. எந்தெந்த பொருட்களை பெண்கள் தங்களுடைய கைகளினால், தானம் கொடுப்பதன் மூலம், நம்முடைய இல்லறத்திற்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கான பதிலை எல்லாம் தெரிந்து கொள்வோம்.நம்முடைய வீட்டு வாசலில், இல்லை என்று வந்து யாசகம் கேட்பவர்களுக்கு, பெண்கள், தங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை, தங்கள் கைகளாலேயே தானமாக கொடுக்கலாம்.

இல்லாதவர்களுக்கு காய்கறிகளையும், வீட்டில் இருக்கும் தானியங்களையும் தானமாக வழங்குவதில் தவறில்லை. வீட்டிலுள்ள பெண்கள் அரிசியை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுத்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. காய்கறிகள், தானியங்கள் தானம் கொடுத்தால் நவகிரக தோஷம் நீங்கி, நவகிரகங்களின் ஆசீர்வாதத்தை பெற முடியும். பெண்கள் தங்களுடைய கைகளால், முகம் தெரியாத மனிதர்களுக்கு, மருத்துவ உதவியை செய்வதன்மூலம், நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால், வயது முதிர்ந்த ஆதரவற்றவரின், முழுமையான ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது, உங்களுடைய குடும்பத்திற்கு மிகவும் நல்லது. அதாவது ஆதரவற்ற ஒரு முதியவரின் மருத்துவ செலவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கைகளால் அந்த மருந்து பொருட்களை தானம் செய்வது அவ்வளவு சிறப்பு. இதேபோல், பெண்களின் கையால் குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தானமாக வழங்கலாம். அதாவது ஆதரவற்ற குழந்தைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யலாம்.

அப்படி செய்யும் பட்சத்தில், அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சரஸ்வதி கடாட்சமும் நிறைந்திருக்கும். நம்முடைய வீடுகளில் யாகங்கள் செய்தாலோ, நம் வீட்டில் ஏதாவது விசேஷ பூஜை செய்தாலும், நம் வீட்டு ஆண்கள், சாஸ்திரிகளுக்கு, வஸ்திர தானம் கொடுக்கும்போதும் சரி, அல்லது தட்சனை கொடுக்கும்போது சரி, மனைவியின் கையால் ஒரு சொட்டு தீர்த்தத்தை விட்டு, அதன் பின்பாக, கணவர் அந்த பொருளை தானமாகக் கொடுப்பார். அதாவது, தம்பதிசரீரமாக தான், அந்த தானம் கொடுக்கப்பட வேண்டும் என்பது சாஸ்திரம். அதேபோல், சில பொருட்களை பெண்கள் தனியாக தானமாக அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. தம்பதிகளாக சில பொருட்களை அடுத்தவர்களுக்கு நாம் தானமாக கொடுக்கும் பட்சத்தில், அது நம்முடைய குடும்பத்திற்கு கோடான கோடி புண்ணியத்தை சேர்க்கும். அப்படிப்பட்ட அந்த பொருள் என்ன? நம்மில் பல பேருக்கு அது என்ன பொருள் என்பது கூட தெரிந்திருக்கலாம்!

இருப்பினும், இப்படிப்பட்ட தானங்களை நீங்கள் செய்யும் போது, திருமணமான பெண்கள், உங்களுடைய கணவரோடு சேர்ந்து தான், தானத்தை கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கஷ்டப்படக் கூடிய ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு தேவையான திருமாங்கல்யம், மெட்டி, முகூர்த்த துணியை தானமாக வழங்குவது என்பது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இப்படிப்பட்ட தானத்தை தம்பதியாக தான் செய்யவேண்டும். இதோடு சேர்த்து, ஒரு பெண் அடுத்தவர்களிடம் தங்கத்தை இரவலாக வாங்கி கூட, வேறு ஒருவருக்குக்கு தானமாக கொடுக்க கூடாது. (உங்களுடைய உறவினர்களுக்கிடையே தங்க நகைகளை மாற்றிக் கொள்ளாம். மூன்றாவது நபருக்கு, உங்கள் நகையையும் தானமாக வழங்க கூடாது. அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்கி, அந்த நகையை கட்டாயம் தானம் கொடுக்கவே கூடாது.) குறிப்பாக பெண்கள் எந்த தானத்தை செய்தாலும், அது உங்களுடைய கணவருக்கு தெரியாமல், இருக்கவே கூடாது. இயலாதவர்களுக்கு, பெண்கள் தங்களுடைய கைகளினால், என்ன முடியுமோ அதை தானமாக வழங்கிக் கொண்டே இருக்கலாம். அந்தப் புண்ணியம் அவளை மட்டுமல்ல, அந்தக்குடும்பத்தையே போய் சேரும். அந்த தானத்தை கணவரிடம் மறைக்காமல் செய்வது நல்லது என்று சொல்கிறது சாஸ்திரம். ‘இறைக்கிற கிணறுதான் எப்போவுமே சுரக்கும்’ உங்களால முடிஞ்ச வரைக்கும், இல்லாதவர்களுக்கு தானம் செஞ்சிகிட்டே இருங்க. உங்க கைக்கு மகாலட்சுமி வந்துகிட்டே இருப்பாங்க! என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.