“இமயமலையில் என் கொடி பறந்தால்”.. நடிகர் அஜித்தின் பைக் RIDE.. மாஸ் தெறிக்கும் போட்டோஸ் ….

இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித், இமயமலையில் பைக் ரைடு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் அஜித் BMW பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். இந்த பைக் சுற்றுப்பயணம் தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது. பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் அஜித், தனது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் மற்றும் குடும்பத்தினருடன் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நடிகர் அஜித் தமிழகம் திரும்பியதும் திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டார். அங்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினார். பின்னர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த பைக் சுற்றுப்பயணம் தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

By admin