இரட்டை வேடம் கிடையாது !!ஆனால் எல்லாமே அஜித் தான் !! AK-61 படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்.?

அஜித் குமார் தனது மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் மற்றும் அவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களிடையே ஒரு நிலையான உத்வேகமாக இருக்கிறார். அவர் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்த போதிலும், அவரது திரைப்பட விளம்பரங்களைத் தவிர்ப்பது உட்பட பொதுவில் அரிதாகவே தோன்றினாலும் அவரது ரசிகர்கள் பின்தொடர்தல் அவருக்கு விசுவாசமாக உள்ளது.

நடிகர் அஜித் தற்போது, தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு பிரமாண்ட செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வங்கியில் பணம் கொள்ளயடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. அந்த தகவலை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். ஒரு அஜித் வில்லன் எனவும், ஒரு அஜித் ஹீரோ எனவும் சொல்லப்படுகிறது.

இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு அஜித் இரண்டு வேடங்களில் நடித்த வாலி, வில்லன், அட்டகாசம் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமாரின் ‘ஏகே 62’ இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா அல்லது சமந்தா நடிக்கலாம்.

By admin