இரவில் வீட்டில் நீங்கள் செய்யவேக் கூடாத இந்த 2 முக்கியமான விஷயங்கள் என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க வேணாமா ??

இரவு நேரத்தில் பெரும்பாலும் வீட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் தேவையில்லாத நிறைய பிரச்சனைகள் வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு நேரத்தில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள். பின்னர் வீட்டில் தரித்திரம் தான் ஏற்படும். நாம் எவ்வளவு தான் பூஜை, புனஸ்காரங்கள் என்று செய்தாலும், வீட்டை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே பணவரவு தாராளமாக இருக்கும். சிறிய வீடாக இருந்தாலும் ஒரு சிலர் அவ்வளவு சுத்தமாக அழகாக வைத்திருப்பார்கள். அவர்களிடம் நிச்சயம் கஷ்டம் என்பதே இருக்காது. அதையே நீங்கள் பெரிய வீடாக இருந்தாலும் குப்பையாக போட்டு வைத்திருந்தால் நிச்சயம் தரித்திரம் ஏற்படும். இதனால் பண வரவு தடைபடும். செய்யும் தொழிலில், வரும் வருமானத்தில் சிக்கல்கள் உண்டாகும்.

இதற்கு முழுமுதற் காரணம் நீங்கள் உங்கள் வீட்டை சரியாக வைத்திருக்கவில்லை என்பது தான். நாம் இரவில் செய்யக்கூடாத தவறுகள் 2 என்ன என்று இந்த பதிவில் காண்போம்.அன்னலட்சுமியின் வரம் பெற அன்னத்தை துடைக்கக் கூடாது என்பார்கள். இரவு சாப்பாடு சாப்பிட்டு முடித்த பின் மீதம் இருக்கும் சாதத்தைக் சுத்தமாக ஒரு பருக்கை கூட இல்லாமல் துடைத்து வழித்து எடுத்து விட்டு கழுவ போடக்கூடாது. அதனால் வறுமை ஏற்படும் என்பார்கள். அவ்வகையில் நாம் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும். அப்படி நாம் என்ன தவறு தான் செய்கிறோம்? என்பதை பார்த்து விடுவோம் வாருங்கள். முதலாவதாக நாம் செய்யும் மிகப்பெரிய தவறு ஈரத்துணியை இரவு நேரத்தில் அப்படியே போட்டு வைப்பது தான். இரவு நேரத்தில் துணி துவைப்பவர்கள் ஈரம் சொட்ட சொட்ட அப்படியே வைத்திருக்கக் கூடாது. அதை நன்கு பிழிந்து விட்டு உடனே உலர்த்திவிட வேண்டும்.

வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் அல்லது நாமே கூட சில நேரத்தில் தண்ணீர் போன்ற ஏதாவது ஒன்றை சிந்தி விடுவோம். அதை துடைக்க ஒரு துணியை எடுத்து விட்டு அப்படியே போட்டு வைத்து விடக்கூடாது. அது போல் சமையலறையை சுத்தம் செய்வோம். அதற்கு பயன்படுத்தும் துணியை கூட ஈரமாக அப்படியே போட்டு விட்டு விடுவோம். எந்த ஒரு துணியையும், ஒரு சின்ன கைக்குட்டை கூட ஈரம் இருக்கும் பொழுது உலர்த்தாமல் அப்படியே சுருட்டி போட்டு வைப்பது நிச்சயம் வீட்டில் பணத்தடை மற்றும் தரித்திரத்தை கொண்டு வரும். -வேறு வழியே இல்லை இரவு நேரத்தில் துணி துவைக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது என்றால் துணி துவையுங்கள் பரவயில்லை. ஆனால் அந்த துணியை தவறியும் அப்படியே வைத்து விடாதீர்கள் என்று தான் கூற வருகிறோம். நன்கு பிழிந்து உலர்த்தி விடுங்கள்.

பெரும்பாலும் இரவு நேரத்தில் வெளியில் ஈரத்துணியை உலர்த்துவது அவ்வளவு நல்லதல்ல. வீட்டிற்குள் பேன் காற்றில் உலர விடலாம். அது போல் இரவு நேரத்தில் நாம் செய்யும் இரண்டாவது தவறு மீதமான சாப்பாட்டை வெளியில் கொட்டுவது. இதையும் எந்த காரணம் கொண்டும் இனி செய்யாதீர்கள். மீதமாகும் சாதத்தை பிரிட்ஜில் வைத்து மறுநாள் காலையில் வேண்டுமானால் அதை ஜீவராசிகளுக்கு போட்டு விடலாம். அப்போதும் கூட அதனை குப்பையில் எறியாதீர்கள். அன்னத்தை நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குப்பையில் கொட்டுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களது தனவரவு தடைபடும். வீட்டில் வறுமை உண்டாகும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். முடிந்தவரை சிக்கனமாக சமைக்க பழகுங்கள். முடியாதபட்சத்தில் சாதத்தை வீணடிக்காமல் மற்ற ஜீவராசிகளுக்கு உணவளியுங்கள். இதன் மூலம் சுபீட்சம் பெறுங்கள்.