இறைவன் ஆற்றலை உங்கள் வீட்டு பூஜை அறையில் தங்கவைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் !!

நம்மில் நிறைய பேருக்கு இறைவழிபாடு செய்வதில், அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், சிலரால் தொடர்ந்து இறைவழிபாட்டை செய்யவே முடியாது. வீட்டில் தினந்தோறும் பூஜை அறையில் இறைவனை வழிபட வேண்டும். பூஜை செய்ய வேண்டும், என்று நினைப்பார்கள்! ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். வீட்டில் தீபம் கூட ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த தடங்கள் மனதில் தேங்கி, மன அழுத்தத்தை உண்டாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. ‘நம்மால் ஏன் இறைவழிபாட்டை செய்ய முடியவில்லை? ஏதேனும் தோஷம் இருக்குமோ? அல்லது ஏதாவது தெய்வ குத்தம் இருக்குமோ?’ என்ற பயம் உள்மனதில் கட்டாயம் வரும்.

இப்படிப்பட்டவர்கள் வீட்டு பூஜை அறையில், எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், நம் வீட்டில் இறைசக்தியை நிரந்தரமாக எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் உங்களது இறை வழிபாடிலும், பூஜை புனஸ்காரங்களிலும், தொடர்ந்து தடை ஏற்படுவதாக இருந்தால், உங்கள் வீட்டு பூஜை அறையில் யானை படத்தை வைக்க வேண்டும். அந்த யானையானது, தும்பிக்கையை மேல் நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட யானை உருவம் கொண்ட, சிலையையும் வைத்து பூஜை செய்யலாம். படமாகவும் வைத்து பூஜை செய்யலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். தும்பிக்கு மட்டும் மேலே பார்த்த பாரு இருக்க வேண்டும். பூஜையில் தடை ஏற்படுகிறது என்றால், உங்கள் வீட்டு பூஜை அறையில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு, இறைவழிபாட்டில் தினம்தோறும் வில்வம் துளசி அருகம்புல் இந்த மூன்று இலைகளையும் வைத்து வழிபாட்டை செய்து வாருங்கள். கண்ணுக்கு தெரியாத தோஷங்களையும் விளக்கக் கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் நிறைய தாமரை சின்னங்களை ஆங்காங்கே வைப்பது நல்லது. தாமரை பூ கோலம், தாமரை பூ, தாமரைப்பூ வரைபடம், திருமகள் தாமரைப்பூவில் அமைந்திருக்கும் தோற்றம் உள்ள படங்கள் இதை அதிகப்படியாக நம் வீட்டில் வைப்பது இறை ஆற்றலை அதிகரிக்கும். தாமரை பூ நிறைந்த குளம் போன்ற படங்களும் வைக்கலாம். இப்படி தாமரை முத்திரையை அதிகமாக பார்க்கும் பட்சத்தில் நம், வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும்.

உங்களது தினசரி பூஜை தொடங்குவதற்கு முன்பு, இரண்டு ஏலக்காயையும் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தையும் கொஞ்சம் போல் வைத்து, ஒரு கல்லில் நசுக்கி அந்த தூளை பூஜை அறையில் லேசாக தூவி விடுவது மிகவும் நல்லது. இந்த வாசம் நம் வீட்டில் இறையாற்றலை தக்க வைக்கும். மிக்ஸியில் போட்டு அரைத்து எல்லாம் இந்த தூளைத் தூவ கூடாது. கையால் நசுக்கி தான் தூவவேண்டும். சில நாட்கள் தொடர்ந்து உங்கள் பூஜையை, மேற்குறிப்பிட்ட முறையில் செய்து வாருங்கள். இறைவழிபாட்டில் மனநிறைவும் ஏற்படும். உங்கள் வீட்டில் இறைசக்தி குடிகொள்ளும். உங்களது வழிபாடும் தடைபடாது. உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றங்கள் வருவதை உங்களால் உணர முடியும். மன அமைதியையும் ஏற்படுத்தித் தரும். இவை எல்லாவற்றையும் தாண்டி, நம்பிக்கையான இறைவழிபாடு நல்ல பலனைத் தரும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.