ஈ கொசு எறும்பு, மூட்டைப்பூச்சி, பல்லி, கரப்பான் பூச்சி, இவைகளை எல்லாம் நம் வீட்டிற்குளிருந்து நிரந்தரமாக துரத்தி அடிக்க இயற்கையான தீர்வு !! சூப்பரான சுலபமான டிப்ஸ் உங்களுக்காக !!

பெரும்பாலும் நம்முடைய வீட்டை எப்படித்தான் வைத்திருந்தாலும், எப்படித்தான் சுத்தம் செய்தாலும், கொசு எறும்பு இப்படிப்பட்ட பூச்சிகளின் பிரச்சனை அதிகமாக தான் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தப் பூச்சிகளின் மூலம் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பிரச்சனை கட்டாயம் வரும். பார்ப்பதற்கு கொசு, ஈ இவைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், இவைகள் பரப்பக் கூடிய வியாதிகள் உயிரைக் கொல்லும் அளவிற்கு பெரும் ஆபத்தானது தான். வீட்டில் இப்படிப்பட்ட பூச்சிகள் தொல்லையிலிருந்து எப்படித்தான் விடுபடுவது? அதுவும் செயற்கையான பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எப்படி நம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படிப்பட்ட பூச்சிகளின் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க நாம் பயன்படுத்தும் செயற்கையான பொருட்கள் நமக்கு மேலும் அதிகப்படியான வியாதிகளை உடம்புக்குள் கொண்டு வந்து விடுகிறது. முடிந்தவரை செயற்கையான பொருட்களை தவிர்த்து விட்டு, இயற்கையான இந்த முறையை பின்பற்றி தான் பார்க்கலாமே. எந்த வீட்டில் அசுத்தம் நிறைந்த இருக்கின்றதோ அந்த வீட்டில் கட்டாயம் ஈ இருக்கும். எந்த வீட்டு சமையல் அறையும், குளியல் அறையும் சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டில் ஈ க்கு வேலையே கிடையாது. நம் வீட்டில் இறைவனுக்காக ஏற்றும் சூடம் அதாவது கற்பூரம் இருக்கும் அல்லவா அந்த கற்பூரத்தை லேசாக தண்ணீரில் கரைத்து, அந்தத் தண்ணீரில் 4 புதினா இலைகளைக் கசக்கி போட்டு, ஈ இருக்கும் இடங்களில் தெளித்து விட்டால், ஈக்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.

முடிந்தால் வீடு துடைக்கும் போது, கற்பூரத்தை தூள் செய்து தண்ணீரில் போட்டு, புதினா சாறு எடுத்து, ஒரு மூடி ஊற்றி அதில் கலந்து வீடு துடைத்தால் கூட வீட்டில் ஈ தொல்லை இருக்காது. அடுத்தபடியாக கொசு, இந்த கொசுவை விரட்டுவது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். இதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது. சுத்தமான வேப்ப எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த வேப்ப எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். மேலே இரும்பினால் செய்யப்பட்ட மூடி போட்ட கண்ணாடி பாட்டில்கள் கிடைக்கும் அல்லவா? டெட்டால் பாட்டில், ஜாம் பாட்டில், பழைய காலியான மருந்து பாட்டில்கள், இப்படிப்பட்ட பாட்டில்கள் எல்லாம் கிடைக்கும். அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பாட்டில்களில், மண்ணெண்ணெய் ஊற்றி, திரி போட்டு விளக்கேற்றி பயன்படுத்துவார்கள் அல்லவா அதே மாதிரிதான். அந்த மூடியில் ஒரு சிறிய ஓட்டையை போட்டுக் கொள்ளுங்கள். பாட்டிலில் முக்கால்வாசி அளவு வேப்பெண்ணையை ஊற்றி, பிரியாணி இலைகளை அந்த எண்ணெயில் கிள்ளிப்போட்டு, அந்தத் திரியை எண்ணெயில் நனைத்து, மூடியில் இருக்கும் ஓட்டியில் விளக்கு போல் தயாரித்து விட வேண்டும். அதன்பின்பு அந்த திரியை ஏற்றி வைத்து விட்டால், அதிலிருந்து ஒருவிதமான வாசனை, புகை வெளிப்படும். இந்த வாசத்திற்கு உங்கள் வீட்டிற்குள் ஒரு கொசு கூட வராது. வீட்டுக்குள் கொசு இருந்தாலும் அது மடிந்து போகும். பாட்டிலில் எல்லாம் உங்களால் போட முடியாது என்றாலும் பரவாயில்லை. ஒரு மண் அகல் விளக்கில் வேப்பெண்ணையை ஊற்றி அதில் பிரியாணி இலைகளைக் கிள்ளிப் போட்டு தடிமனான, விளக்கு திரி போட்டு அந்த தீபத்தை ஒளிர விட்டு, உங்கள் வீட்டில் எத்தனை அறைகள் இருக்கின்றதோ அத்தனை அறைகளிலும் ஒவ்வொரு அகல் விளக்கை வைத்து விட்டால் போதும்.

இயற்கையான கொசு விரட்டி இது. அடுத்தபடியாக எரும்பு, எரும்பு பிடிக்காத வாசனை என்றால் அது லவங்கம் வாசனை தான், உங்கள் வீட்டில் சர்க்கரை டப்பா, நாட்டுசர்க்கரை டப்பா, ஸ்வீட் டப்பா, வெல்லம் போட்டு வைத்திருக்கும் டப்பா, எதுவாக இருந்தாலும் அதில் 4 கிராம் போட்டு வைத்தால் அந்த பக்கம் எருந்து வரவே வராது. கிராம்பு எண்ணெய் என்று கடைகளில் கிடைக்கின்றது. கிராம்பு அந்த எண்ணையை வாங்கி எறும்புப் புற்று இருக்கும் இடங்களில் தடவியோ அல்லது ஊற்றியும் விட்டால் அந்த இடத்திலிருந்து எரும்பு காணாமல் போய்விடும். அந்த லவங்கம் வாசம் இருக்கும் வரை மீண்டும் அந்த இடத்தில் இரும்பு கட்டாயம் வராது. கட்டெறும்பு கூட வராது என்பது குறிப்பிடத்தக்கது. வண்டுகள், நம்முடைய வீட்டில் மளிகை ஜாமான்களை சேகரித்து வைத்தால், அதில் கட்டாயம் சின்ன சின்ன அளவிலான வண்டு இருக்கும். அரிசி பருப்பு எல்லா பொருட்களிலும் வண்டு வருவது சகஜம்தான். கொஞ்சமாக கல் உப்பை மிக்சியில் போட்டு பொடி செய்து அந்தத் உப்பை அரிசியோடு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து கிலோ அரசியல் இரண்டு ஸ்பூன் உப்பை கலப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. வசம்பு கிராம்பு பிரியாணி இலை வேப்ப இலை இந்த நான்கு பொருட்களில் உங்களுக்கு எது கிடைக்கிறதோ, அந்த பொருட்களை வாங்கி எடுத்துவந்து மளிகை ஜாமான்களை சேகரித்து வைத்திருக்கும் டப்பாவில் போட்டு கலந்து மூடி விட்டு விடுங்கள் வண்டின் பிரச்சனைகள் நீங்கிவிடும்.

மூட்டைப்பூச்சி பிரச்சனையா, வீட்டில் காலியான குளிக்கிற சோப்பு, துணி சோப்பு, துணி பவுடர் இப்படியாக உங்களுடைய வீட்டில் பயன்படுத்தும் எல்லா வகையான சோப்பு காகிதத்தையும் அலமாரியில் ஆங்காங்கே சொருகி வைத்து விடுங்கள். மூட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து நிச்சயம் விடுபட முடியும். பல்லிக்கு வெங்காயம், பூண்டு, டெட்டால் வாடை சுத்தமாக பிடிக்காது. வெங்காயம் பூண்டு இவைகளை நன்றாக அரைத்து அதில் வரும் சாறு பிழிந்து, எடுத்து அதில் ஒரு மூடி அளவு டெட்டால் ஊற்றி கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் பள்ளி இருக்கும் இடங்களில் எல்லாம் அடித்து வையுங்கள் அங்கிருந்து பல்லி தானாக காணாமல் போய்விடும். கரப்பான் பூச்சிக்கு, பூச்சி உருண்டை வாடை சுத்தமாக பிடிக்காது. இதேபோல் சூடம். கற்பூரத்தின் வாசனையும் பிடிக்காது. இந்த கற்பூரத்தை கொஞ்சமாக தூள் செய்து, சமையலறை சிங்க் ஓரத்தில் எப்போதுமே போட்டு வையுங்கள். கரப்பான் பூச்சிகள் கட்டாயம் வெளியில் சமையலறைக்கு வராது. சமையலுக்குப் பயன்படுத்தும் சோடா உப்பை சிங்கின் கொட்டி வைத்தால், அதாவது இரவு நேரத்தில் கொட்டி வைத்து விட்டீர்கள் என்றால், அந்த கரப்பான் பூச்சி இறந்து போய்விடும். முடிந்தால் சுடுதண்ணியில் இந்த சோடா உப்பை கரைத்து சிங்கின் ஓட்டையில் வாரம் ஒரு முறை, ஊற்றி வாருங்கள் சமையலறையில் கரப்பான் பூச்சி பிரச்சனை இருக்கவே இருக்காது. முடிந்தால் உங்கள் வீட்டிற்குள் புதினா இலைகளை தொட்டியில் வளர்த்து வரலாம். அந்த புதினா வாசம் எந்த ஒரு பூச்சி தொல்லையும் வீட்டிற்குள் வரவிடாது. சின்ன சின்ன பிளாஸ்டிக் டப்பாவில், கொஞ்சமாக மண் போட்டு, அதில் சின்ன வெங்காயத்தை நட்டு வைத்தீர்கள் என்றால் அந்த வெங்காயம் வளர ஆரம்பிக்கும். இப்படி வெங்காயம் வளரும் போது அதனுடைய வாசம் அதிகப்படியாக நமக்கு கிடைக்கும். இந்த வாசத்துக்கு பள்ளி கட்டாயம் வராது. முடிந்தால் இந்த இரண்டு செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பது இயற்கையாக நமக்கு நன்மையை கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.