உங்களது பாவக்கணக்குகளை போக்க கோவிலுக்கு இதை தானமாக கொடுத்தால் போதும் !! எப்படிப்பட்ட தோஷமும் நொடியில் காணாமல் போய்விடும் !!

நிறைய பேருக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. சிலபேர் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, பரிகாரங்களை செய்ய மாட்டார்கள். ஆனால், பிரச்சனை வந்த வழியே தெரியாமல், ஒரு முடிவுக்கு வந்துவிடும். காரணம்! அவர்கள் செய்த புண்ணியம். சிலபேர், சிறிய பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு திண்டாடுவார்கள். அந்த, பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு நிறையா, பெரிய பரிகாரங்களை எல்லாம் செய்து பார்ப்பார்கள். பிரச்சனை மட்டும் தீர்ந்து. இதற்கு காரணம், அவர்கள் செய்த கர்ம வினை என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் செய்த கர்ம வினையில் இருந்தும், பாவத்திலிருந்தும் வெளியில் வரவேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்கு, தொடர்ந்து 11 வாரங்கள் செல்ல வேண்டும். அம்மனுக்கு சிவப்பு நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ புடவை எடுத்து வைத்து மாலை அணிவித்து, முடிந்தால் எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, வளர்பிறையில் வரும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று, 4 1/2 அடியில், இரும்பினால் செய்யப்பட்ட திரிசூலத்தை தானமாகக் கொடுப்பது மிகவும் சிறந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. அப்படி இல்லை என்றால், ஏதாவது ஒரு கோவிலுக்கு மணியை வாங்கி தானமாக கொடுக்கலாம். குறிப்பாக அந்த மணி இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். 1 1/4 கிலோ எடை கொண்டதாக இருந்தால் மிகவும் சிறப்பானது. ஒரு மணியை தானமாக கொடுக்க கூடாது. 4 மணிகள் தானமாக கொடுக்கப்படும் பட்சத்தில், உங்களது கர்ம வினைகள் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (ஒவ்வொரு மணிகளும் 1 1/4 கிலோ வில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.) நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

கூடிய விரைவில் உங்களது வாழ்க்கை முன்னேற்றம் அடைவதை கண்கூடாக காணலாம். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தீராத ஏதாவது பிரச்சனை இருந்து வந்தால், அது ஓரிரு மாதங்களில் கட்டாயம் ஒரு நல்ல முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. இதேபோல் நீங்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்து பலனளிக்கவில்லை என்றால், அதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது. அது என்ன என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மூங்கிலினால் செய்யப்பட்ட பாயின் மீது அல்லது மூங்கில் குச்சியினால் செய்யப்பட்ட நாற்காலியின் மீதோ அமர்ந்து, நீங்கள் உங்களது வேண்டுதல்களை வைக்கும் பட்சத்தில் அது கூடிய விரைவில் நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்கள் மனதார நினைக்கும் எந்த ஒரு நல்ல வேண்டுதலாக இருந்தாலும், மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பொருளின் மேல் அமர்ந்து இறைவனிடம் வேண்டுதல் வைத்து பாருங்கள். முடியாதவர்கள் ஒரு சிறிய மூங்கில் குச்சியை யாவது உங்கள் கையில் வைத்துக் கொண்டால், எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும், எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும், அதற்கு விரைவில் பலன் கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.