உங்களது முகம் தெய்வ கலையுடன் இருக்க, இன்றைக்கே இந்தத் தண்ணீரால் முகத்தை கழுவுங்கள் !! இனி உங்களுக்கு மட்டும் இல்ல உங்க முகத்தில் முழிப்பவருக்கும் ராசிதான் …

சிலரது முகத்தை பார்க்கும்போது அந்த மகாலட்சுமி தேவியே வந்து கூடி இருப்பது போல லட்சணமாக இருக்கும். அதாவது, நிறத்தை பற்றி சொல்லவில்லை. முக லட்சணம், அந்த கலை என்பது சிலருக்கு இயற்கையாகவே முகத்தில் இருக்கும். சிலர் என்னதான் முகத்திற்கு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி வந்தாலும், முகத்தில் மூதேவி அடைந்தது போல் காணப்படுவார்கள். முகத்தில் குடிகொண்டிருக்கும் அந்த சோக்கத்தை நீக்கக் கூடிய சக்தி நம்மிடமே உள்ளது. சுலபமான முறையில் இந்த தண்ணீரை வைத்து, உங்களது முகத்தை தினமும் கழுவி வாருங்கள் உங்களது முகம் இயற்கையாகவே லட்சுமிகடாட்சம் தோடு கலையாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அது எந்த தண்ணீர் தெரிந்து கொள்ளலாமா?

காலையில் எழுந்தவுடன் ஒரு தாம்புளத் தட்டில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரில் உங்களது உள்ளங்கைகளை வைத்து மகாலக்ஷ்மியை மனதார நினைத்து ‘ஓம் மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு, அந்த தண்ணீரை எடுத்து உங்கள் முகத்தில் நன்றாக தெளித்து கழுவி வரவேண்டும். தினம்தோறும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் முகம் கட்டாயம் லட்சுமிகடாட்சதோடு மாறிவிடும். இதேபோல், உங்களுக்கு தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையவில்லை என்றாலும், தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டே வருகிறீர்கள் என்றாலும் தினமும் காலையில் எழுந்து, இதேபோல் தாம்புல தட்டில் தண்ணீரை வைத்து, உங்களது இரண்டு உள்ளங்கைகளையும் அந்த தண்ணீரில் தொட்டு, ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயக போற்றி’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு அந்த தண்ணீரால் உங்களது முகத்தை கழுவ வேண்டும்.

இதேபோல் மன தைரியம் குறைவாக உள்ளவர்களாக இருந்தால் அவர்கள், தினம்தோறும் அனுமனது பெயர் அல்லது நரசிம்மரின் பெயரை சொல்லி, மேல் குறிப்பிட்ட முறையை பின்பற்றி, அந்த தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் மன தைரியம் அதிகரிக்கும். கடன் தொல்லை, எதிரி தொல்லை உள்ளவர்கள், பைரவரின் பெயரைச் சொல்லி இதேபோல் தண்ணீரை முகத்தில் தினம்தோறும் ஊற்றி கழுவி வந்தால் கடன் பிரச்சனை தீரும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடலாம். உங்களது பிள்ளைகள் கல்வியில் கொஞ்சம் மந்தமாக இருந்தால் அவர்களுடைய கைகளை, அந்த தண்ணீரில் வைத்து சரஸ்வதியின் பெயரைச் சொல்லி, அதன் பின்பு அந்த தண்ணீரிலேயே அவர்களது முகத்தை கழுவி விடுங்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

உடல்நிலை சரி இல்லாதவர்கள் முருகப் பெருமானின் பெயரை தினம்தோறும் உச்சரித்து அந்த தண்ணீரால் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு தெய்வம் என்று, ஒன்று கட்டாயம் இருக்கும். நம்முடைய அடிப்படை பிரச்சினைகளுக்கு எந்தெந்த தெய்வத்தை வேண்டிக் கொண்டால், எந்தெந்த தீர்வு கிடைக்கும், உங்களுக்கு எந்த பிரச்சினை அதிகமாக இருக்கின்றதோ, அந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து, அந்த தண்ணீரால் தினமும் முகம் கழுவி வந்தாலே போதும். முகம் பொலிவடைவதோடு முகத்தில் லட்சுமி கடாட்சம் குடி கொள்வது மட்டுமல்லாமல், உங்களுடைய பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். ஒரு நாளில் தீர்வை எதிர்பார்க்காதீர்கள். குறைந்தபட்சம் 48 நாட்களாவது ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி, பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.