உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மஞ்சள் நிறம். எப்படி ஏன் தெரியுமா !!

புவியில் உள்ள ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு குணங்களை கொண்டது. அது போல் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் ஓராயிரம் கதைகளும் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டு இருக்கும். அதில் மஞ்சள் நிறம் எந்த கடவுளுக்கு உகந்த நிறம் என்று நாம் அனைவரும் அறிந்ததே! நவ கிரகங்களில் சுப கிரகமாக இருந்து வரும் குரு பகவானின் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். ஜோதிட ரீதியாக ஒருவரது லக்னத்தில் குரு இருந்தால் அந்த ஜாதகருக்கு மறுபிறவி கிடையாது என்ற கூற்றும் நிலவி வருகிறது. அது ஒருபுறம் இருக்க அவரது கடைக்கண் பார்வை படாதா?? என்று காத்திருப்போர் பலர் இப்புவியில் உண்டு. அவர் பார்வை படும் ஸ்தானம் எல்லாம் நற்பலன்களை அள்ளி தரும்.

குருவிற்கு உகந்த இந்த மஞ்சள் நிறம் எப்படி ஒருவரது வாழ்கையில் அதிர்ஷ்டம் உண்டாக்கும் என்று இப்பதிவில் காணவிருக்கிறோம். குரு பகவானின் உகந்த நிறம் மஞ்சள். அது போல் குரு பகவானின் உகந்த நாளாக இருப்பது வியாழன் கிழமை ஆகும். ஒவ்வொரு வியாழன் அன்றும் மஞ்சள் நிறத்திலான உடைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். வியாழன் கிழமை தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொள்வது நன்மைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து வியாழன் கிழமை அன்று விரதம் இருப்பவர்களுக்கு சகல செல்வங்களும், பாக்கியங்களும் கிடைக்கும். அன்றைய தினத்தில் கோவிலுக்கு சென்று அங்குள்ள நவ கிரகங்கங்களை வணங்கி விட்டு, குரு பகவானுக்கு மஞ்சள் நிறத்தலான பூக்களை சாற்றி வழிபட வேண்டும்.

மஞ்சள் நிற பூ கிடைக்காவிட்டால், குரு பகவானுக்கு உகந்த முல்லை பூவையும் சாற்றலாம். குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மிகவும் பிடித்த ஒன்று. எனவே அவருக்கு மாலை சாற்றுவது என்றால், கொண்டைக் கடலையை கோர்த்து மாலையாக சாற்றி வழிபடலாம் இதன் மூலம் குரு பகவானின் அருள் பெற்று யோகம் பெறலாம். மஞ்சள் நிற உணவு பொருட்களை தானம் அளித்தால் மேலும் பலன் கூடும். வாழைப்பழம், கொண்டை கடலை போன்றவற்றை தானமாக அளிக்கலாம். வியாழக்கிழமை தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொள்வதால் தடைப்பட்ட சுப நிகழ்வுகள் விரைவில் நடக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் குறைந்து விடும்.

ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமை இழந்து காணப்பட்டால் அவர்களுக்கு நற்பலன்கள் உண்டாவதை பிரபஞ்சம் தடுத்து விடும். அவரின் பார்வை பெரும் ஸ்தானத்தில் நடக்க கூடிய நன்மைகள் தடைபடும். உதாரணத்திற்கு குருவின் பார்வை 5ஆம் இடமான புத்திர பாக்கியம் தரும் ஸ்தானத்தில் பதிவதால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் இருந்த தோஷங்கள் நீங்கும். ஆனால் குரு வலிமை இழந்தால் அந்த ஸ்தானத்தில் சிக்கல்கள் நீடிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க குருவின் அருள் கட்டாயம் வேண்டும். குரு வழிபாட்டை மேற்கொள்ளும்போது குரு பகவானின் ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும். அவரின் ஸ்தோத்ரம் உச்சரிக்கும் போது தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். அதுவே குரு வலிமை பெற்று இருக்கும் போது நினைத்து பாருங்கள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி விடுவார் அல்லவா? எனவே வியாழன் தோறும் முறையாக குரு வழிபாடு செய்வது அதிர்ஷ்டத்தை பெருக்கும். ஈட்டிய செல்வத்தை நிலைக்க செய்யும்.